இதே நாளில் அன்று

Added : ஜன 12, 2020
Advertisement
 இதே நாளில் அன்று

ஜனவரி 13, 1949
ராகேஷ் சர்மா: பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில், 1949 ஜன., 13ல் பிறந்தார். பள்ளி படிப்பை, ஐதராபாத்தில் முடித்தார். 1966ல், தேசிய ராணுவ பள்ளியில் விமானப் படை பிரிவில் சேர்ந்து, படிப்பை முடித்தார். இந்திய விமானப் படையில், பயிற்சி விமானியாக, 1970ல், பணியாற்றினார். 1982, செப்., 20ல், விண்வெளிக்கு செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், 1984, ஏப்., 2ல் விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். அவருடன், ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவரும், சோயுஸ் டி -11 விண்கலத்தில் பயணம் மேற்கொண்டனர்.

சல்யூட் 7 என்ற விண்வெளி மையத்தில், அவர்கள் தங்கி இருந்தனர். பல்வேறு அறிவியல் ஆய்வுகளை இக்குழு மேற்கொண்டது. ராகேஷ் சர்மாவுக்கு, அசோகா சக்ரா விருது, இந்திய அரசால் வழங்கப்பட்டது; சோவியத் யூனியனின் நாயகன் எனும் விருதும் பெற்றார்.
அவர் பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X