சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜன 12, 2020 | கருத்துகள் (4)
Advertisement
 'டவுட்' தனபாலு

தமிழக, காங்., தலைவர் அழகிரி: ஒரு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி கூட, காங்கிரசுக்கு, தி.மு.க., வழங்கவில்லை என்பதற்காக, 'இது, கூட்டணி தர்மமில்லை' என, பேட்டி அளித்திருந்தேன்; உண்மை தான். அது, நேற்றே முடிந்து விட்டது. அது பற்றி இன்று பேசக் கூடாது. தி.மு.க.,வுடன் கூட்டணி தொடரும். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை; எந்த கசப்பும் இல்லை.

'டவுட்' தனபாலு: இப்படி நீங்கள், அவசரம் அவசரமாக மறுப்பதை பார்த்தால், டில்லி மேலிடம் உங்களை போனில் அழைத்து, 'தமிழகத்தில் அரசியல் அனாதை ஆகப் பார்க்கிறீர்களா? மத்திய அரசுக்கு எதிராக, தி.மு.க.,வை கொம்பு சீவி விட்டுள்ளோம்; அதுவும், கண்ணை மூடிக் கொண்டு, மத்திய அரசையும், மோடியையும் நன்றாக எதிர்த்து வருகிறது. இந்நிலையில், சாதாரண மாவட்ட பஞ்சாயத்து பதவிக்காக, தி.மு.க.,வை எதிர்த்து பேசுறீங்களா; முதலில் வாபஸ் பெறுங்கள்...' என, உங்களுக்கு, 'டோஸ் விட்டுருக்குமோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறதே!

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: அரசியலில் நான் கால் எடுத்து வைத்த போது, 'உங்கள் மகனை, அரசியலுக்கு கொண்டு வந்து விட்டீர்கள்; வாரிசை உருவாக்கி விட்டீர்கள்' என, விமர்சனம் எழுந்தது. அதற்கு கருணாநிதி, 'ஸ்டாலினை, 'எமர்ஜென்சி' தான் அரசியலுக்கு அழைத்து வந்து விட்டது; நான் அழைத்து வரவில்லை' என்றார்.

'டவுட்' தனபாலு: நீங்கள் அரசியலுக்கு வந்தது, அதன் பின், இளைஞரணி தலைவரானது, மேயர் ஆனது, உள்ளாட்சி அமைச்சர் ஆனது, துணை முதல்வர் ஆனது எல்லாவற்றிற்கும், எமர்ஜென்சி தான் காரணமாக இருக்கட்டும். உங்கள் மகன் உதயநிதி, இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட, எந்த எமர்ஜென்சி காரணமோ; 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

பத்திரிகை செய்தி: பிரதமர் மோடி குறித்தும், உள்துறை அமைச்சர் அமித் ஷா பற்றியும், அவதுாறாக பேசிய, காங்கிரசை சேர்ந்த, பேச்சாளர் நெல்லை கண்ணன், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவரை, முஸ்லிம்களின், எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் அழைத்துச் சென்றனர். சேலம் சிறையின் பின்பக்க வாசல் வழியாக அவர்கள் வெளியே சென்றனர்.

'டவுட்' தனபாலு: ஏலேய்... நான் என்ன சொன்னேன்னு, இத்தன நாளா என்ன புடுச்சு உள்ளே போட்டுட்டானுக... நா, எல்லா மேடையிலயும் இப்பிடித்தான பேசுவேன். அப்பல்லாம் சும்மா இருந்த இந்த பயலுவ, இப்ப, புகார் குடுத்து உள்ளே புடிச்சு போட்டுட்டானுவ... அதுக்கு, நான் பயப்பட மாட்டேன்ல; நான், சைவ மதத்தை சேந்தவன்; யாருக்கும் பயப்பட மாட்டேன்லா... இன்னும் பேசுவேம்லா... நா என்ன சொல்லுதேன்; ஏடே, ஒனக்கு புரியுதாடே...' என, மீண்டும் பேசுவாரோன்னு, 'டவுட்' வருது!

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
13-ஜன-202019:48:31 IST Report Abuse
karutthu இனி நொள்ளை கண்ணன் வாய் திறக்கமாட்டார் என நினைக்கிறன்
Rate this:
Share this comment
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
13-ஜன-202007:51:21 IST Report Abuse
கல்யாணராமன் சு. ஸ்டாலின் எமெர்ஜென்சியின் மூலமா அரசியலுக்கு வரலேனா, என்ன பண்ணிட்டிருந்துருப்பாரோ அப்படின்னு நினைக்கும்போது, பெண்கள் கல்லூரிகள் நினைவுதான் வருகிறது .............
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
13-ஜன-202006:14:10 IST Report Abuse
vasumathi அரசியல் அவரை எப்போதும் சாக்கடையில் தான் தள்ளி இருக்கு/. தமிழ் இலக்கியம் அவரை மேலே மேலே தூக்கி பாக்குது. இதுக்கும் மேலே அவர் மேடையை பார்த்து செல்வது நல்லது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X