பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு பொருட்கள்: எம்.எல்.ஏ., வழங்கல்

Added : ஜன 12, 2020
Advertisement

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில், பு.முட்லுார் ரேஷன் கடையில், தமிழக அரசின் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. கூட்டுறவு வங்கி தலைவர் ஹாஜா நஜிமுதீன் சேட் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றிய செயலர் அசோகன், துணை தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கி செயலர் பார்த்திபன் வரவேற்றார். 6 ஆயிரத்து 536 பயனாளிகளுக்கு, பொங்கல் பரிசு பொருட்களை, கடலுார் கிழக்கு மாவட்ட செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கினார்.ஒன்றிய அவைத் தலைவர் ராசாங்கம், மாவட்ட மீனவரணி செயலர் வீராசாமி, ஒன்றிய கவுன்சிலர் ரங்கம்மாள், முன்னாள் நகர செயலர் சுந்தர், பாஸ்கர், ஜெ., பேரவை துணை செயலர் ராஜேந்திரன், ஊராட்சி செயலர் கோதண்டம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X