சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம் : செவ்வாய்க்கு மனிதர்கள்

Added : ஜன 12, 2020
Advertisement

செவ்வாய் மற்றும் நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் உள்ளதா என்பது பற்றிய ஆய்வில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் நாசா சார்பில் 2024ல் நிலவுக்கு முதன்முதலாக பெண் விஞ்ஞானிகள் செல்ல உள்ளனர். அதே போல 2030ல் செவ்வாய்க்கு முதன்முதலாக மனிதர்கள் செல்லும் திட்டத்தையும் நாசா தொடங்கியுள்ளது. இதற்கான விஞ்ஞானிகள் குழு தற்போது தேர்வு செய்யப்பட்டள்ளது. இதில் 11 பேர் அமெரிக்கா, 2 பேர் கனடாவை சேர்ந்தவர்கள். இதில் ஆறு பெண்கள், ஏழு ஆண்கள் அடங்குவர். 18 ஆயிரம் விண்ணப்பங்களிலிருந்து தேர்வாகினர்.


தகவல் சுரங்கம் : தாழ்வான விமான நிலையம்

உலகில் உள்ள விமான நிலையங்களில், மிக தாழ்வான இடத்தில் அமைந்துள்ள விமான நிலையம் இஸ்ரேலில் உள்ளது. 'பார் யஹூடா' என்ற இந்த விமான நிலையம், அங்குள்ள ஜூடியான் பாலைவனப் பகுதியில் 1963ல் தொடங்கப்பட்டது. இது இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 1,240 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. இந்த விமான நிலைய ஓடுதளத்தின் நீளம் 3,937 அடி. 'சாக்கடலின்' மேற்குப்பகுதியில் இந்த விமான நிலையம் உள்ளது. இது மாற்று விமானநிலையமாக பயன்படுத்தப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X