பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

Added : ஜன 12, 2020
Advertisement

புவனகிரி: புவனகிரி அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.புவனகிரி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கிரீடு தொண்டு நிறுவன தலைவர் நடனசபாபதி தலைமை தாங்கினார். செயலர் டாக்டர் உதயசூரியன் வரவேற்றார். நிர்வாகிகள் ஆறுமுகம், துரை பாலச்சந்தர், ஞானவள்ளல் முன்னிலை வகித்தனர்.முன்னாள் மாணவரும், அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்வேறு ஆலோசனை வழங்கினார்.கூட்டத்தில், அரசு பள்ளியில் தற்போது படிக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தி, அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிட தேவையான உதவிகளை செய்வது, பள்ளியில் கண்காணிப்பு கேமரா அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அன்பழகன், சென்னை ரமேஷ், அண்ணாஜோதி, முருகன், சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முருகதாஸ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X