சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

எழுத்து மீது எனக்கு தீராத காதல்!

Added : ஜன 12, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 எழுத்து மீது எனக்கு  தீராத காதல்!

வெளிநாட்டில் வசித்தாலும், தமிழை மறக்காமல், தமிழில் நாடகங்கள், கவிதைகள் எழுதி வரும் சுபஸ்ரீ ஸ்ரீராம்: நான், தமிழறிஞர் பரிதிமாற் கலைஞருக்கு பேத்தி உறவு முறை. பிறந்தது, வளர்ந்தது எல்லாம் புதுக்கோட்டை தான். கரூரில் பட்டப்படிப்பை முடித்தேன். 2002ல் திருமணம் ஆனது. கணவருக்கு, துபாயில் வேலை; அங்கே குடியேறினோம். அதன் பின், கணவருக்கு பஹ்ரைனில் வேலை; 10 ஆண்டுகள் அங்கு கழித்து விட்டு, மீண்டும் துபாய் வந்தோம்.

சின்ன வயதிலிருந்தே தமிழ் மீது அதிக ஆர்வம். பத்திரிகைகள், நாவல்கள் படிக்க பிடிக்கும். பல பத்திரிகைகளுக்கு, கவிதைகள், கட்டுரைகள், துணுக்குகள் எழுதியுள்ளேன். திருமணத்திற்கு பின், நிறைய எழுத துவங்கினேன். 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் தான், முதலில் என் கவிதைகளை வெளியிட்டேன்.அதில் கிடைத்த, 'லைக்'குகள், அதிகமாக எழுத துாண்டின. துபாயில் இருந்தபடி, தமிழக பத்திரிகைகளுக்கு எழுத துவங்கினேன். கடந்த, 2017ல், துபாயில், குறுநாடகப் போட்டி நடந்தது. அதில் பங்கேற்ற நான், 'சொர்க்கமே என்றாலும்' என்ற தலைப்பில் நகைச்சுவை நாடகத்தை நடத்தினேன்.அந்த நாடக போட்டிக்கு, 'கிரேசி' மோகன் தலைமை வகித்தார்.

அந்த நாடகத்திற்கு, மூன்று விருதுகள் கிடைத்தன. பரிசளிப்பு விழாவில், கிரேசி மோகன் என்னை பாராட்டி பேசினார். 'நகைச்சுவை நடிகர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால், நகைச்சுவையாக நாடகம் எழுதும் பெண்கள் அபூர்வம். உங்கள் காமெடி உணர்வு பாராட்டுக்குரியது' என்றார். அந்த வார்த்தைகள், என்னாலும் நாடகம் எழுத முடியும் என்ற நம்பிக்கையை என்னுள் ஏற்படுத்தியது. 2018லும், நாடக போட்டியில் பங்கேற்று, இரண்டு விருதுகள் பெற்றேன். தமிழ் பத்திரிகைகள் சிலவற்றில், நகைச்சுவை நாடகங்கள் எழுதியுள்ளேன்.அதன் பின், துபாயில் உள்ள கோவில்கள் பற்றிய கட்டுரை, சிறுகதைகள், கவிதைகள், சமையல் குறிப்புகள் எழுதியுள்ளேன். தமிழ் மொழி மீதுள்ள தீராத காதலால், தொடர்ந்து எழுதி வருகிறேன்.

சென்னையில், 2015ல், பெருவெள்ளம் வந்த போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பேஸ்புக் சமூக வலைதளம் மூலம் பலரிடம் உதவிகளை பெற்று செய்துள்ளேன். பேஸ்புக், மிகப் பெரிய, சக்தி வாய்ந்த ஊடகம். ஆக்கப்பூர்வமாக அதை பயன்படுத்தினால், நிறைய நன்மைகள் கிடைக்கும்.தமிழ் படைப்புகளுடன் நின்று விடாமல், துபாயில் எங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், அதையும் செய்கிறேன்; பிரச்னைகளுக்கு ஆலோசனைகளும் வழங்கி வருகிறேன்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
13-ஜன-202020:32:46 IST Report Abuse
Nallavan Nallavan தமிழ்ப் புத்தாண்டை தை முதல் தேதிக்கு மாற்றத் தூண்டு கோலாக இருந்தது பரிதிமாற் கலைஞரே என்று கட்டுமரம் சொன்னது நெசம்தானா மேடம் ????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X