பொது செய்தி

தமிழ்நாடு

குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பிரசாரம் பிற்படுத்தப்பட்டோர் பேரவை தீர்மானம்

Added : ஜன 12, 2020
Advertisement

புவனகிரி: மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து, மாவட்டம் முழுவதும் தெருமுனை பிரசார கூட்டம் நடத்துவது என பிற்படுத்தப்பட்டோர் பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவையின், சிதம்பரம் சட்டசபை தொகுதி கூட்டம் புவனகிரி அருகே தம்பிக்கு நல்லாம்பட்டினத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் வீரவன்னியன் வேங்கன் தலைமை தாங்கினார்.தொகுதி அமைப்பாளர் ரமேஷ் வரவேற்றார். நிர்வாகிகள் பூபாலன், சந்தோஷ், குமார், சிவக்குமார், அரங்க பாஸ்கர், திருமலைராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சேதமடைந்த நிலையில் உள்ள புவனகிரி-விருத்தாச்சலம் செல்லும் சாலையை சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வரும் 30ம் தேதி, விருத்தாசலம் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது, புவனகிரியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்.பரங்கிப்பேட்டை தனியார் அனல்மின் நிலையத்தில் கடலூர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து, பிற்படுத்தப்பட்டோர் பேரவை சார்பில் மாவட்டம் முழுவதும் தெருமுனை பிரசார கூட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X