சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் - லாரி மோதல்

Added : ஜன 12, 2020
Share
Advertisement

புதுக்கோட்டை : திருமயம் அருகே, அரசு விரைவு பஸ் மீது, கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், மூன்று பேர் உயிரிழந்தனர்.சென்னையில் இருந்து சிவகங்கைக்கு, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, 30 பயணியருடன், அரசு விரைவு, 'ஏசி' பஸ் புறப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே, பில்லமங்களம் பகுதியில், நேற்று காலை, 7:00 மணிக்கு வந்தபோது, எதிரே, 'டைல்ஸ்' ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி, அரசு பஸ் மீது மோதியது. இதில், பஸ், லாரியின் முன் பக்கம் முழுவதும் சேதமடைந்தன.திருமயம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். விபத்தில் பஸ்சில் பயணம் செய்த, 40 வயது ஆண், 10 வயது சிறுவன் மற்றும் 42 வயது லாரி டிரைவர் உயிரிழந்தனர். பஸ்சில் பயணித்த, 10க்கும் மேற்பட்ட பயணியர் பலத்த காயம் அடைந்தனர்.லாரிக்குள் சிக்கிய டிரைவர் உடலை, கிரேன் மற்றும் பொக்லைன் உதவியுடன், மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X