குளித்தலை : குளித்தலை அருகே, பைக் மீது கார் மோதிய விபத்தில், இரு குழந்தைகளுடன், தந்தை பலியானார். படுகாயமடைந்த தாய், சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் அமலாபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், 37. இவர் மினரல் வாட்டர் கேன்களை விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி மீனா, 30.இவர்கள், 4 வயது மகள், 2 வயது மகனுடன், 'கவாசகி' பைக்கில், நேற்று மதியம், 3:00 மணியளவில், கரூர் மாவட்டம், தோகமலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக, மேலவெளியூரில் உள்ள வளைவில் வந்து கொண்டிருந்தனர்.அப்போது, கரூரில் இருந்து திருச்சி சென்ற போர்டு கார், பைக் மீது பயங்கரமாக மோதியது.
இதில், நால்வரும் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள், நான்கு பேரையும் மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.வழியில், இரு குழந்தைகளும் உயிரிழந்தனர். தம்பதியை, மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், சீனிவாசன் இறந்தார். மீனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தப்பியோடிய கார் டிரைவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE