சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பேஸ்புக்'கில் ஆபாச வீடியோ

Added : ஜன 12, 2020 | கருத்துகள் (7)
Advertisement
 'பேஸ்புக்'கில் ஆபாச வீடியோ

சென்னை : குழந்தைகள், சிறுவர் - சிறுமியர் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை முகநுாலில் பரப்பிய, சென்னையை சேர்ந்த, உடற்பயிற்சி சாதன மொத்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.

இணையதளம் வாயிலாக, குழந்தைகள், சிறுவர் - சிறுமியர் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பது சட்டப்படி குற்றம். தடைவிதிப்புஇதுபோன்ற படங்கள் மற்றும் வீடியோக்களை, கணினி, மடிக்கணினி மற்றும் மொபைல் போனில் வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான, குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை வேப்பேரி பகுதியில் இருந்து, முகநுாலில், குழந்தைகள், சிறுவர் மற்றும் சிறுமியர் தொடர்பான ஆபாச வீடியோக்கள் பரப்பப்பட்டு இருப்பதாக, தேசிய அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு மையம் கண்டுபிடித்தது. அந்த மையம், சென்னையில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான, குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமிக்கு தகவல் அளித்தது.இதையடுத்து, அப்பிரிவு போலீசார், கணினி வழி குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் உதவியுடன், சென்னை, சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையை சேர்ந்த சுமித்குமார் கல்ரா, 49, என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அவர், எழும்பூர் மாண்டியத் சாலையில், உடற்பயிற்சி சாதன மொத்த வியாபார கடை நடத்தி வருவதும், இணையதளங்கள் வாயிலாக, குழந்தைகள், சிறுவர் மற்றும் சிறுமியரின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திருப்பதும் தெரியவந்தது.மேலும், அந்த படங்கள் மற்றும் வீடியோக்களை, தன் முகநுால் பக்கத்தில் வெளியிட்டதுடன், அதை வேறு சில முகநுால் பக்கத்திற்கும் பகிர்ந்துள்ளது தெரிய வந்தது. சிறையில் அடைப்புஇதையடுத்து, வேப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரிடம், சுமித்குமார் கல்ராவை ஒப்படைத்தனர். அவர்கள், சுமித்குமார் கல்ராவை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
14-ஜன-202012:33:29 IST Report Abuse
TamilArasan வக்கிர புத்தியுடைய மனிதர்கள்... கடுமையான நடவடிக்கை தேவை...
Rate this:
Share this comment
Cancel
Ashwanth - TIRUCHIRAPPALLI,இந்தியா
14-ஜன-202011:03:02 IST Report Abuse
Ashwanth சூப்பர் sir
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
14-ஜன-202010:33:55 IST Report Abuse
skv srinivasankrishnaveni இதுபோல பிசாசுகள் எல்லாம் காலரா வந்துதான் சாவானுக
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X