சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிரை சைக்கிளில் நோயாளி ராமேஸ்வரத்தில் அவலம்

Added : ஜன 12, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 டிரை சைக்கிளில் நோயாளி ராமேஸ்வரத்தில் அவலம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோவிலில் மயக்கம் அடைந்த பெங்களூரு பெண் பக்தரை, டிரை சைக்கிளில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த எக்கப்பஜி என்பவரின் மனைவி சுமித்ரா, 51. இவர்கள், உறவினர்களுடன் நேற்று, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு வந்தனர். தீர்த்தங்களில் நீராட சென்றபோது, நீரிழிவு நோயாளியான சுமித்ரா, திடீரென ரத வீதியில் மயங்கி விழுந்தார்.எக்கப்பஜி, அப்பகுதி மக்களிடம், ஆம்புலன்ஸ் உள்ளதா என கேட்டும் கிடைக்கவில்லை. பின், அங்கிருந்த டிரை சைக்கிளில், சுமித்ராவை ஏற்றி, 1 கி.மீ.,யில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, 20 நிமிடங்களுக்குப் பின் கொண்டு சென்றனர்.

சிகிச்சைக்காக, நோயாளியை டிரை சைக்கிளில் ஏற்றிச் சென்றது, மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆம்புலன்ஸ் எங்கே?மத்திய அரசு, 'அம்ரூத் சிட்டி' திட்டத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கு, பல கோடி ரூபாய் வழங்கியுள்ளது.ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகமும், தகவல் பலகை, பூங்கா,சுற்றுலா கோபுரம் அமைத்து, நிதியை செலவிட்டது.இங்கு, 108 அவசரகால ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் இருந்தும், வெளியூர் பக்தர்களுக்கு தகவல் தெரியவில்லை.'கோவில் நிர்வாகம், நகராட்சி சார்பில் ஆம்புலன்ஸ் இயக்க வேண்டும். ரதவீதி, முக்கிய இடத்தில் ஆம்புலன்ஸ் குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்' என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
13-ஜன-202011:40:38 IST Report Abuse
Girija அரசு இலவச ஆம்புலன்ஸ் அழைத்தும் வரவில்லையா ? அல்லது அப்படி ஒரு சேவை இருக்கிறது என்று சொல்ல ஒரு உள்ளூர் வாசிகள் இல்லையா ? அல்லது உள்ளூர் வாசிகள் எல்லோரும் ஊமைகளா ? அல்லது விழி இருந்தும் குருடர்களா? மனிதாபிமானம் செத்துவிட்டதா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X