பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்

Added : ஜன 12, 2020
Share
Advertisement

கடலுார்: கடலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட 227 ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது.

கடலுார் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் சேர்ப்பு ,நீக்கம் மற்றும் திருத்த முகாம் நடந்தது. கடலுார் சட்டசபை தொகுதியில் மொத்தம் 227 ஓட்டுச்சாடிகள் உள்ளது. இதில் நேற்று காலை முதல் வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்த சிறப்பு முகாம் நடந்தது.கடலுார் புதுப்பாளையம் நகராட்சி பள்ளியில் நடந்த முகாமை தாசில்தார் (பொறுப்பு) சுரேஷ்குமார், தேர்தல் துணை தாசில்தார். வெற்றிச்செல்வன், தேர்தல் வருவாய் ஆய்வாளர் ரவி ஆகியோர் பார்வையிட்டனர். அதே போல் கடலுார், வண்டிப்பாளையம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், புருக்கீஸ்பேட்டை,மஞ்சக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடியில் அமைக்கப்பட்ட முகாம்கள் ஆய்வு செய்யப்பட்டன.இம் முகாமில் விடுப்பட்ட வாக்காளர்கள் வரும் 22ம் தேதிக்குள் , நகராட்சி அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் மனு கொடுத்து பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X