சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளி கொலை வழக்கு

Added : ஜன 12, 2020
Advertisement

திருப்பூர் : பனியன் தொழிலாளி அடித்து கொல்லப்பட்ட வழக்கில், போலி நிருபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர், கோல்டன் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ், 37; பனியன் தொழிலாளி. அப்பகுதியைச் சேர்ந்த பாத்திமா கனி என்பவரிடம், 1.5 சவரன் நகையை வாங்கி, அடகு வைத்தார்.வேலை செய்யும் இடம் அருகே, நாகராஜ் என்பவரிடம், 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். இருவரிடமும் பணத்தை திருப்பி கொடுக்க, சுரேஷ் காலதாமதம் செய்தார்.இதனால், பாத்திமா கனியின் கணவர் சாகுல் அமீது, உறவினர் அப்துல் காதர், நாகராஜ் ஆகியோர், சுரேஷை தாக்கினர். இதில், அவர் இறந்தார். சாகுல் அமீதை, வடக்கு போலீசார் கைது செய்தனர். தலைமறைவான, மூவரை தேடி வந்த நிலையில், நாகராஜ், அப்துல் காதர், கோர்ட்டில் சரணடைந்தனர்.

இருவரையும் கஸ்டடி எடுத்து விசாரித்தனர். அதில், தலைமறைவானவர் குறித்து தெரிந்தது.தலைமறைவாக இருந்த, சேட் ரூபைதீன் என்பவரை, வடக்கு போலீசார் கைது செய்தனர். அவர் போலி நிருபர்என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து, மூன்று ஐ.டி., கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X