அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொண்டர்களே என் முதல் தெய்வம்: விஜயகாந்த் நெகிழ்ச்சி

Added : ஜன 12, 2020 | கருத்துகள் (4)
Advertisement
 தொண்டர்களே என் முதல் தெய்வம்: விஜயகாந்த் நெகிழ்ச்சி

சென்னை : ''எனக்காக பிரார்த்தனை செய்த தொண்டர்கள் தான், என் முதல் தெய்வம்,'' என, கொரட்டூர் பொங்கல் விழாவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

சென்னை, கொரட்டூர் பஸ் நிலையம் அருகே, தே.மு.தி.க., சார்பில், பொங்கல் விழா நேற்று நடந்தது. இதில், கட்சியின் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, இளைஞர் அணி செயலர் சுதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.விழாவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசுகையில், ''எனக்காக பிரார்த்தனை செய்த தொண்டர்கள் தான், என் முதல் தெய்வம். முழு உடல் நலம் பெற்று, மீண்டும் வருவேன். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்,'' என்றார்.நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், கட்சி சீருடை அணிந்து, பொங்கல் வைத்தனர். பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, கட்சியின் பொருளாளர் பிரேமலதா பேசியதாவது:குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் குரல்கள் எழுகின்றன.

இந்தியா என்றால் ஹிந்து நாடு தான். அதில், மாற்று கருத்தில்லை. இங்கு, அனைத்து மத மக்களும், சகோதரத்துவமாக, ஒற்றுமையுடன் வாழும், அமைதியான சூழல் உள்ளது. அதை பயன்படுத்தி, பயங்கரவாதம் செய்வோருக்கு, நம்நாட்டில் இடமில்லை.இந்த ஆண்டில், இனிமேல் தான் நம் ஆட்டம் ஆரம்பமாகும். உள்ளாட்சி தேர்தலில், நமக்கு கிடைத்த வெற்றி, யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது தான். இனி வரும் தேர்தல்களில், தே.மு.தி.க., விஸ்வரூப வெற்றி பெறும். அடுத்து நடைபெறும் மாநகராட்சி தேர்தலில், கடுமையாக உழைத்து, அனைத்து வெற்றிகளையும் நமதாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
13-ஜன-202019:33:40 IST Report Abuse
karutthu இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம் என்கிறீர்கள் ....ரொம்ப ஆடாதீங்க மேடம் உள்ளதும் போய்விடும் .
Rate this:
Share this comment
Cancel
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
13-ஜன-202013:32:37 IST Report Abuse
மனிதன் இந்த ஒரு பெண்மணியால் தான், விஜயகாந்த என்ற ,அந்த மாமனிதனின், வாழ்கை தடம் புரண்டது...ஆண்டாண்டு காலமாய் இருந்த நட்பு வட்டத்தை பிரித்தது, அரசியலில் தனியாகவே பிரயாணம் செய்ய ஆசைப்பட்ட அந்த மனிதனை, கூட்டணி குழிக்குள் தள்ளியது, தன் பணத்தாசைக்கும், பதவி ஆசைக்கும், அருமையாக வரவேண்டிய அவரின் அரசியல் வாழ்வை, சில காலம் காத்திருக்க முடியாமல், காவு கொடுத்தவர்... அரசியலில் இந்த பெண்மணியின் தலையீடு இல்லாமல், விஜயகாந்த் கவனித்திருப்பாரேயானால், தன் உடல் நலமும் ஒத்துழைத்திருந்தால், இன்றைய முதல்வர் அவராகத்தானிருந்திருப்பார்....
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஜன-202012:08:40 IST Report Abuse
Lion Drsekar இவர் ஒரு நல்ல மனிதர் தன் சொந்த பணத்தில் அன்னதானம், போன்ற மிக நல்ல நல்ல சேவைகளை செய்து வருபவர், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X