சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தலைவர் தேர்தலில் தோல்வி வார்டு உறுப்பினர் வீடு சூறை

Added : ஜன 12, 2020
Advertisement

திருவண்ணாமலை : கண்ணமங்கலம் அருகே, துணைத் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த ஆத்திரத்தில், வார்டு உறுப்பினர் வீடு சூறையாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த, காட்டுகாநல்லுார், பஞ்., துணைத் தலைவர் தேர்தல், நேற்று முன்தினம் நடந்தது.இதில், கவிதா சுதாகர்,ஏழு ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். சங்கீதா விஜயகுமார், ஆறு ஓட்டுகள் பெற்று, தோல்வி அடைந்தார். இவரது தோல்விக்கு, வார்டு உறுப்பினர் முரளிகிருஷ்ணன் ஓட்டு போடாதது தான் காரணம் என கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த சங்கீதாவின் கணவர் விஜயகுமாரும், அவரது ஆதரவாளர்கள், 10 பேரும் சேர்ந்து, ரெட்டிப்பாளையத்தில் உள்ள முரளிகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று, அவருடைய மாமியார் முல்லைலட்சுமியை தாக்கினர். மேலும், அங்கிருந்த கேபிள், 'டிவி' ஒளிபரப்பு கடை மற்றும், 'டிவி'க்களை அடித்து நொறுக்கினர். இதனால், அப்பகுதியில்கேபிள் 'டிவி' ஒளிபரப்பு தடைபட்டது. கண்ணமங்கலம் போலீசார், விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X