பொது செய்தி

தமிழ்நாடு

கடல் கொள்ளையர்கள் சிறைபிடித்த பொறியாளர் தாயகம் திரும்பினார்

Added : ஜன 12, 2020
Advertisement

சென்னை : நைஜீரியா நாட்டு கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட, தமிழக கப்பல் பொறியாளர், நேற்று தாயகம் திரும்பினார்.


சென்னை விமான நிலையத்தில், அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் கண்ணீர் மல்க வரவேற்றனர்.சென்னை, தாம்பரம் -- முடிச்சூர் சாலை, வெற்றி நகரை சேர்ந்தவர் ஆனந்தன். இவர், சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில், எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருகிறார்.இவரது மகன் வருண்குமார், 29; கப்பல் பொறியாளரான இவர், 'ஸ்டெர்லிங் குளோபல் ஆயில் வெஸ்ஸல்' என்ற நிறுவனத் திற்கு சொந்தமான, 'அம்பிகா' என்ற, சரக்கு கப்பலில் பணியாற்றி வருகிறார்.

சிறைபிடிப்புஇந்த கப்பல், ஜனவரி, 2ம் தேதி இரவு, 10:30 மணியளவில், நைஜீரிய நாட்டில் உள்ள, ரமோஸ் நதிக்கரையோரம் சென்ற போது, கடற்கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த நான்கு பேரை சுட்டுக் கொன்று, கப்பலை சிறைபிடித்தனர்.கப்பலில், வருண்குமார் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த, இரு பொறியாளர்கள் இருந்தனர். கப்பல் நடுக்கடலில் சென்றபோது, எரிபொருள் தீர்ந்தது.இதனால், வருண்குமார் உள்ளிட்ட மூவரையும், கடற்கொள்ளையர்கள் படகு வாயிலாக, வேறு இடத்திற்கு கடத்திச் சென்றனர். அந்த படகும், இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்து.

இதனால், வருண்குமார் உள்ளிட்டோர், ஐந்து நாட்கள், உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் தவித்தனர். பின் துடுப்பு உதவியுடன், வருண்குமார் உள்ளிட்ட மூவரையும், கடற்கொள்ளையர்கள் அங்குள்ள காட்டிற்கு கடத்தி சென்றனர்.இந்த தகவல், நைஜீரிய நாட்டு பாதுகாப்பு படை போலீசாருக்கு தெரியவந்தது. அவர்கள், கப்பலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், காட்டில் பதுங்கி இருந்த, கடற்கொள்ளையர்களுடன், ஜனவரி, 7ல், துப்பாக்கி சண்டை நடத்தினர்.அப்போது, வருண்குமார் உள்ளிட்ட மூவரும், கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்து தப்பி, நைஜீரிய நாட்டு பாதுகாப்பு படையினரிடம் தஞ்சம் அடைந்தனர்.

கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட வருண்குமார், மத்திய அரசு உதவியுடன், டில்லியில் இருந்து நேற்று மாலை, 3:30 மணிக்கு, 'ஏர் இந்தியா' விமானத்தில், சென்னை வந்தார்.குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவரை கண்ணீர் மல்க வரவேற்றனர்.


மறுஜென்மம்


சென்னை விமான நிலையத்தில், வருண்குமார் கூறியதாவது:மறுஜென்மம் எடுத்தது போல உள்ளது. நானும், ரஷ்ய நாட்டு பொறியாளர்களும் உயிருடன் திரும்ப மாட்டோம் என்று தான் நினைத்தோம்.ஆனால், நைஜீரியா பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உதவியால், உயிர் பிழைத்துள்ளோம். எங்களை மீட்க பாடுபட்ட அனைவருக்கும் நன்றி.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X