சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வானிலை மோசம் விமானங்கள்,

Added : ஜன 12, 2020
Advertisement

சென்னை : துபாயில் மோசமான வானிலை நிலவியதால், அங்கிருந்து, சென்னைக்கு வரவேண்டிய ஐந்து விமானங்கள், மூன்று மணி நேரம் தாமதமாக, சென்னை வந்தன.

துபாயில் நேற்று நள்ளிரவு முதல், மோசமான வானிலை நிலவியது. இதனால், அங்கிருந்து, சென்னைக்கு வரவேண்டிய, ஐந்து விமான நிறுவனங்களின் விமானங்கள், இரண்டு மணி முதல், மூன்று மணி நேரம் வரை தாமதமாக, சென்னைக்கு வந்தன. அதேபோல, சென்னை யில் இருந்து, துபாய் செல்லும் விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால், துபாய் செல்லவிருந்த பயணியர், கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.விமான சேவை ரத்துசென்னையில் இருந்து, நேற்று அதிகாலை, 5:15க்கு, ஐதராபாத் செல்லவேண்டிய, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானத்தில் பயணம் செய்ய, போதிய பயணியர் இல்லாததால், அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X