சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., கொலை வழக்கு விசாரணை தீவிரம்; குற்றவாளிகளை நெருங்குகிறது போலீஸ்

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தமிழக போலீசாரின் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. தனிப்படையின் செயல்பாட்டை வேகப்படுத்த மற்ற பணிகளுக்காக கூடுதலாக ஒரு எஸ்.பி. நியமக்கப்பட்டுள்ளார்.எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் அப்துல் சமீம் தவுபிக்கை பிடிக்க தமிழக போலீசார் 10 கேரள போலீசார் 3 என 13
SI,murder,police,TamilNadu,எஸ்ஐ,கொலை,வில்சன்

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தமிழக போலீசாரின் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. தனிப்படையின் செயல்பாட்டை வேகப்படுத்த மற்ற பணிகளுக்காக கூடுதலாக ஒரு எஸ்.பி. நியமக்கப்பட்டுள்ளார்.எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் அப்துல் சமீம் தவுபிக்கை பிடிக்க தமிழக போலீசார் 10 கேரள போலீசார் 3 என 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் போலீசார் கவனம் செலுத்தினாலும் கேரளாவில்தான் விசாரணை முழு வீச்சில் நடக்கிறது. பெரும்பாலான தனிப்படைகளும் கேரளாவில்தான் முகாமிட்டுள்ளன. அவர்களுக்கு கேரள போலீசார் உதவுகின்றனர். கொலைக்கு முன்னும் பின்னும் கொலையாளிகளிடம் அலைபேசியில் பேசியவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 100 பேர் போலீசாரின் விசாரணைக்குள் வந்துள்ளனர். அதில் அப்துல் சமீம் அதிகம் பேரிடம் பேசியது தெரிய வந்துள்ளது.

திருவனந்தபுரத்தில் ஒரு கம்ப்யூட்டர் சென்டரிலும் அதன் உரியைாளரான பெண் வீட்டிலும் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட சில பொருட்களை கைப்பற்றியுள்ளனர். அந்த பெண் குற்றவாளிகளில் ஒருவரின் மனைவி என்று கூறப்படுகிறது. கேரளாவில் இஞ்சிவிளையை சேர்ந்த தாசிம் சித்திக் ஆகியோரை கேரள தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு கி.மீ.ல் இஞ்சிவிளை உள்ளது. கேரளாவில் நடக்கும் விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கொலையாளிகளுக்கு நெருக்கமான சிலர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

தக்கலையில் 9 தென்காசியில் 4 பாறசாலையில் 2 பேர் என 15 பேரிடம் விசாரணை நடக்கிறது. இவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களின் அலைபேசி எண்களின் அடிப்படையில் 100 பேர் போலீசின் கண்காணிப்பில் வந்துள்ளனர். கொலையளிகள் இருவர் உட்பட 16 பேர் கொண்ட புதிய பயங்கரவாத அமைப்பு கொலை பின்னணியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. களியக்காவிளையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் கைப்பற்றப்பட்டு விசராணை நடக்கிறது.


குமிரிக்கு மேலும் ஒரு எஸ்.பி.,

தனிப்படையின் செயல்பாட்டை மேலும் வேகப்படுத்தும் வகையில் ஸ்ரீநாத் எஸ்.பி. பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு குமரி மாவட்ட சட்டம்-ஒழுங்கை கவனிக்க மதுரை அமலாக்கப்பிரிவு எஸ்.பி.யாக இருந்த பி.ராஜராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதிகளை பிடிக்கும் தனிப்படையின் சிறப்பு அதிகாரியாக ஸ்ரீநாத் செயல்படுவார்.


சபரிமலையில் பாதுகாப்பு அதிகரிப்பு:

எஸ்.ஐ. வில்சன் கொலை சம்பவத்தை தொடர்ந்து சபரிமலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு நெருங்கி வரும் நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க கூடுதல் உளவுப்பிரிவு போலீசார் நிலக்கல் பம்பை சன்னிதானம் மற்றும் பத்தணந்திட்டை முதல் பம்பை வரை உள்ள முக்கிய இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கு சிரமம் தராமல் சோதனைகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக பத்தணந்திட்டை எஸ்.பி. ஜி. ஜெயதேவ் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜன-202013:50:36 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பிடிபடும் தீவிரவாதிக்கு மதமில்லை என்று இப்போதே சொல்லிவிடுகிறோம் - சுடாலின்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஜன-202012:10:03 IST Report Abuse
Lion Drsekar காவல் துறைக்கு நாம் தலை வணங்குகிறோம் . ஆனால் ...? வந்தே மாதரம்
Rate this:
Cancel
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜன-202010:15:48 IST Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  நிலைமை கைமீறுவதற்குள் இந்த தீவிரவாதிகளுக்கு முட்டு கொடுக்கும் தீய மு க & கான்+கிராஸ் மற்றும் அந்த கும்பலை சேர்ந்த தோழமை கட்சிகளை மக்கள் ஒதுக்க வேண்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X