பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வு

Added : ஜன 12, 2020
Advertisement

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம், 969 பணியிடங்களுக்கான சார்பு மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கான, பொதுப்பிரிவு எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது.

இந்த தேர்வு, விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் ஏழுமலை தொழில்நுட்ப கல்லுாரி, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி, வி.ஆர்.பி., மேல்நிலை பள்ளி, கப்பியாம்புலியூர்சிகா மேல்நிலைபள்ளி, அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரி ஆகிய ஐந்து மையங்களில் நடைபெற்றது.இந்த தேர்வை, மாவட்டத்தில் 5 ஆயிரத்து 913 ஆண்களும், 1,168 பெண்கள் உட்பட மொத்தம் 7,081 பேர் எழுதுவதற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பு பணிகளில், எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 700 போலீசார் ஈடுபட்டிருந்தனர்.இதில், விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி மையத்தை, காவல் துறை ஐ.ஜி., (பொது) கணேசமூர்த்தி ஆய்வு செய்தார்.இந்த தேர்வில், 5 ஆயிரத்து 514 பேர் பங்கேற்றனர்; 1,567 பேர் ஆப்சென்ட்.இதையடுத்து, இன்று (13ம் தேதி) விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 161 பெண்கள் உட்பட மொத்தம் 857 துறைப்பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெறுகிறது.முறைகேடு நடக்காது; ஐ.ஜி., தகவல்விழுப்புரத்தில் நடந்த சார்பு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பொதுப் பிரிவினருக்கான எழுத்து தேர்வு மையத்தை ஆய்வு செய்த ஐ.ஜி., (பொது) கணேசமூர்த்தி கூறியதாவது;சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடத்திற்கான எழுத்து தேர்வு நியாயமான முறையில் நடக்கிறது. முறைகேடுகள் நடைபெறாத வகையில், தேர்வாளர்களுக்கான அழைப்பாணை கடிதம் உட்பட அனைத்தும் சோதனை செய்யப்பட்டு, மையத்திற்குள் அனுப்பப்பட்டனர்' என்றார். ஆய்வின் போது எஸ்.பி., ஜெயக்குமார் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X