பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீரங்க பூபதி கல்லுாரியில்

Added : ஜன 12, 2020
Advertisement

செஞ்சி: ஸ்ரீரங்க பூபதி பி.எட்., கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி பி.எட்., கல்லுாரியில் கடந்த 2014 முதல் 2019ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி விழாவை துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர்கள் கோவிந்தராஜ், செந்தில்குமார், சசிகுமார் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் ஜான் வரவேற்றார்.இதில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வரும் 200க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களின் தற்போதைய வேலை நிலை, கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்தனர். பேராசிரியர்கள் சர்தாஜ், நந்தாபாய், நிர்மலா, சதீஷ்குமார், விழா ஒருங்கிணைப்பாளர் குழு மாணவர்கள் பரந்தாமன், டைசன், சுகந்தி, ஷோபனா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர் வாஜித் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X