தமிழ்நாடு

அரசுப் பள்ளி மாணவ, மாணவி்களுக்கு ஆன்லைன் தேர்வு...போட்டி தேர்வை பதற்றமின்றி எதிர்கொள்ள ஏற்பாடு

Added : ஜன 12, 2020
Advertisement

அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மத்திய, மாநில அரசு சார்பில் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

இந்த தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு வினாத்தாள் மற்றும் ஓ.எம்.ஆர்., ஷீட் (ஒளி வழி குறிக்கு வாசிப்பு) ஆகியவை அளிக்கப்படும். கேள்விக்கான நான்கு பதில்களில் ஏதேனும் ஒரு பதிலினை ஓ.எம்.ஆர்., ஷீட்டில் நீலம், கருப்பு நிற பேனாக்களை பயன்படுத்தி வட்டமிட்டு தேர்வு செய்ய வேண்டும்.இந்நிலையில் கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் டி.ஆர்.பி., தேர்வுகள் ஆன்லைன் தேர்வாக மாற்றப்பட்டது.இதுமட்டுமின்றி வரும் காலங்களில் அரசு சார்பில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளும் கணினி மூலம் ஆன்லைன் வழியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில் ஆன்லைனில் முதல் முறையாக தேர்வு எழுதும் புதிய தேர்வர்கள், தங்கள் பதிவு எண் கொண்டு உள்நுழைதல், கேள்விக்கான பதிலை தேர்ந்தெடுத்து, அதை பதிவு செய்தல், வெளியேறுதல் உள்ளிட்டவைகளில் பல்வேறு குழப்பங்களை சந்திக்கின்றனர்.சிலர் பதற்றத்தால் அனைத்து கேள்விக்கும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பதில் அளிக்க முடியாத சூழ்நிலை உருவாகுகிறது. இது போன்ற தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில், நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு குறித்து பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்ெகாள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, இம்மாத இறுதியில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிப்வரி மாத தொடக்கத்தில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் அந்தந்த பள்ளியிலேயே ஆன்லைன் மூலம் தேர்வு எழுதும் வகையில் 'ஆப்டிடியூட்' (திறனாய்வு தேர்வு) நடத்தப்படுகிறது.

இதற்காக உயர் நிலைப் பள்ளிகளுக்கு 10 கணினியும், மேல்நிலை பள்ளிகளுக்கு 20 கணினியும், பள்ளி கல்வித்துறை மூலம் அனுப்பப்பட்டு, இணையதளத்துடன் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் உட்பட 6 பாடங்களில் இருந்து 90 கேள்விகள் கேட்கப்படுகிறது. இதற்காக ஆன்லைன் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கால அவகாசம் ஒன்றரை மணி நேரம் (90 நிமிடம்) வழங்கப்பட உள்ளது.தேர்வு முடிந்ததும் மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிப்ரவரி மாத தொடக்கத்தில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் திறனாய்வு தேர்வு நடத்த மாவட்ட கல்வித்துறை ஏற்பாடு செய்து வருகிறது. இத்தேர்வு வரும் காலங்களில் ஆன்லைன் தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொள்வதற்கு வாய்ப்பாக அமையும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X