பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மார்க்கெட் ஆக்கிரமிப்பு

Added : ஜன 12, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மார்க்கெட் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி நகர பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மளிகை கடைகள், வணிக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. அன்றாட தேவைகளுக்கான பொருட்கள் வாங்குவதற்கு நகர மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டார கிராம மக்கள் பலரும் இங்கு வந்து செல்கின்றனர்.இதனால், இப்பகுதி முழுவதும் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து மிகுதியாக காணப்படும். குறிப்பாக கடை வீதி, மார்க்கெட் பகுதியில் எப்போது பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதும்.அதற்கேற்றார்போல் மார்க்கெட் பகுதியிலும் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட் நான்கு முனை சந்திப்புக்கு அருகே அமைந்துள்ளது.மார்க்கெட்டிலிருந்து கடை வீதிக்கு செல்லும் அக்ரஹார தெருவிலும் ஏராளமான காய்கறி மற்றும் மளிகை கடைகள் உள்ளன.இந்த சாலை 20 முதல் 25 அடி அகலமுள்ள நிலையில் கடை உரிமையாளர்கள் பலர் தங்களது கடைகளுக்கு முன்பு உள்வாடகைக்கு விட்டுள்ளனர்.மார்க்கெட் பகுதியின் நுழைவு வாயில் முதல் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தவிக்கிறது. அக்ரஹார தெரு முழுவதும் கடைகள் மூலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் ஒரு வழிப் பாதையாக மாறியுள்ளது.இதனால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அக்ரஹார தெருவில் ஆக்கிரமிப்புகள் முற்றிலுமாக அகற்றப்பட்டது.அத்தருணத்தில் பரந்து விரிந்த தெருவாக காணப்பட்டது. தற்போது மீண்டும் கடைகளின் ஆக்கிரமிப்புகளால் குறுகிய தெருவாக மாறிவிட்டது. இதனால், வியாபாரிகள், பொது மக்கள் மிகுந்த அவதியடைகின்றனர்.எனவே, கள்ளக்குறிச்சி மார்க்கெட் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X