பொது செய்தி

தமிழ்நாடு

பெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவம்

Added : ஜன 12, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவம் நேற்று மாலை நடந்தது.

கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நேற்று கூடாரவள்ளி உற்சவம் நடந்தது.பெருமாள், ஆண்டாள் உற்சவர்களுக்கு சிறப்பு அபிேஷகம் செய்த பின், சர்வ அலங்காரம் செய்து கோவில் உள்பிரகாரம் வலம் வந்து மண்டபத்தில் எழுந்தருள செய்தனர்.ஆண்டாள் பக்தர்கள் திருவம்பாவை, திருப்பாவை பாடினர். சிறப்பு பூஜைகளுக்கு பின் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.பூஜைகளை தேசிக பட்டர் செய்து வைத்தார். மேலும், ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் வரும் 14ம் தேதி போகி பண்டிகையன்று காலை 11 மணிக்கு நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X