பொது செய்தி

தமிழ்நாடு

வறண்ட வானிலை தொடரும்! பகலில் இரவில்

Added : ஜன 12, 2020
Advertisement

சென்னை : 'பருவ மழை முடிந்து விட்டதால், பகலில் மிதமான வெயிலும், இரவில் பனி மூட்டத்துடன் வறண்ட வானிலையும் நிலவும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வட கிழக்கு பருவ மழை, ஜன., 10ல் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை நிலவுகிறது. மூன்று நாட்களாக எந்த இடத்திலும், குறைந்தபட்சம், 1 செ.மீ., அளவுக்கு கூட மழை பெய்யவில்லை. சில இடங்களில், சிறு துாறல் மட்டும் விழுந்துள்ளது.இந்நிலையில், வரும் நாட்களை பொறுத்தவரை, பகலில் மிதமான வெயிலும், இரவில் பனி மூட்டமும் காணப்படும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இது குறித்து, வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு:வட கிழக்கில் இருந்து வீசும் காற்று, வலுவிழந்து விட்ட நிலையில், வளி மண்டலத்தில் பனி மூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், இரவு முதல், அதிகாலை வரை, பனியின் தாக்கம் அதிகரிக்கும். தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்து மிகுந்த நகரப் பகுதிகளில், குறைந்தபட்ச வெப்பநிலை, இயல்பை விட குறைந்து, பனி மூட்டத்துடன், காற்றின் மாசுகளும் கலந்து காணப்படுகின்றன.தற்போதைய முன் பனிக் காலத்தில், மலைப் பகுதிகளில், காலை நேரங்களில் பனி சூழ்ந்திருக்கும். சில இடங்களில் பகல் வரை, பனியின் தாக்கம் காணப்படும். மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில், வறண்ட வானிலையே நீடிக்கும்.இவ்வாறு, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X