பொது செய்தி

தமிழ்நாடு

சின்னசேலம் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணி தீவிரம்

Added : ஜன 12, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் ரயில் நிலையங்கள் அனைத்தும் மின் பாதையாக மாற்றும் பணி, நடந்து வருகிறது.தமிழகத்தில் புதிய மாவட்டமாக உருவெடுத்துள்ள கள்ளக்குறிச்சியின் பிரதான ரயில் நிலையம் சின்னசேலத்தில் இயங்கி வருகிறது.இங்கிருந்து 1,000க் கும் மேற்பட்ட பொதுமக்கள் சென்னை, சேலம், நாகப்பட்டினம், பெங்களூரு, காரைக்கால் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.இவ்வழியாக தினசரி 16 பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்கின்றன. மூன்று நடைமேடைகள் உள்ளன. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில உணவு கிடங்குகளில் இருந்து 30 ஆயிரம் டன் ரேஷன் அரிசி மூட்டைகள் சரக்கு ரயிலில் சின்னசேலத்திற்கு கொண்டு வரப்பட்டு, தமிழக உணவு கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது.மேலும் மாதந்தோறும் யூரியா மூட்டைகளை ஏற்றி வரும் ஒரு ரயிலும், ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை ஆலை கழிவுகள் கொண்டு வரும் ரயிலும் இங்கு வந்து செல்கின்றன.பழமை வாய்ந்த ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள் தாழ்வான நிலையில் இருப்பதால் ரயிலில் ஏறி, இறங்க பயணிகள் சிரமமடைந்தனர். இதனால் இரண்டு மற்றும் மூன்றாவது நடைமேடைகள் ஒரு அடி உயரம் வரை உயர்த்தப்பட்டுள்ளன.தற்போது ரயில் நிலையத்தில் 760 மீட்டர் நீளத்திற்கு சுற்றுசுவர் கட்டும் பணி, 636 மீட்டருக்கு முதலாம் நடைமேடையை உயர்த்தும் பணி, இருப்பு பாதை ஆய்வாளர் அலுவலகம் கட்டும் பணி ஜரூராக நடந்து வருகிறது.சேலத்தில் இருந்து சின்னசேலம் வழியாக கடலுார் வரை 198 கி.மீ., தொலைவிற்கு மின்சார பாதையாக மேம்படுத்தப்பட உள்ளது.இதற்காக சின்னசேலம் ரயில் நிலையத்தை மின் பாதையாக தரம் உயர்த்த, ரயில்வே நிலையம் அருகே உள்ள பிள்ளையார் கோவில் பின்புறம் மின்மாற்றி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.அந்த இடத்தை தமிழக மின்வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு ஒப்புதல் அளித்துள்ளனர். இதற்கான பணிகளும் வேகம் பிடித்துள்ளது.மேலும் ஏப்ரல் மாதத்தில் இருந்து சேலம் - விருத்தாசலம் வரை செல்லும் பயணிகள் ரயில்கள் அனைத்தும் அரியலுார் வரை நீட்டிபதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X