கண்டாச்சிபுரம் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கண்டாச்சிபுரம் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா

Added : ஜன 12, 2020

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் தனபால்ராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ராமலிங்கம், முத்துக்குமாரசாமி, சரவணபவானந்தம், அண்ணாமலை, கண்ணாயிரம் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் மங்கையற்கரசி வரவேற்றார். டாக்டர் மூர்த்தி தேசியக்கொடி ஏற்றினார்.உளுந்துார்பேட்டை எம்.எல்.ஏ., குமரகுரு பள்ளியின் நுழைவு வாயில் மற்றும் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி ஆண்டு விழா மலரை வெளியிட்டார்.மாவட்டகல்வி அலுவலர் சுப்ரமணியன், ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பி.டி.ஏ., தலைவர் சுப்ரமணியம், மாணிக்கவாசகம், பாலசுப்ரமணியன் தேசத்தலைவர்களின் படங்களைத் திறந்து வைத்தனர்.நிகழ்ச்சியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டது. உதவித் தலைமை ஆசிரியர் மனோசித்ரா நன்றி கூறினார்.விழாவில், தாசில்தார் ஜெயலட்சுமி, பி.டி.ஓ.,க்கள் சாம்ராஜ், ஜானகி, இந்தியன் வங்கி மேலாளர் ரத்தின சவுபாக்கியவதி ஊராட்சி செயலர் அனந்தராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X