எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

100 இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு பூட்டு?

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (13)
Advertisement
Engineering,Colleges,AnnaUniversity,அண்ணாபல்கலை,இன்ஜி,காலேஜ், கல்லூரி

சென்னை: உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத, 100 இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான இணைப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அவற்றை மூட பரிந்துரை செய்யும் நடவடிக்கைகளை, அண்ணா பல்கலைக் கழகம் மேற்கொண்டு உள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்துடன், 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் செயல்படுகின்றன.இந்த கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை, தேர்வு முறை, சான்றிதழ் வழங்குதல் போன்றவை, அண்ணா பல்கலையின் விதிகளின்படி மேற்கொள்ளப் படுகின்றன.

தமிழக உயர்கல்வித் துறையின் அங்கீகாரம் பெற்று, இந்த கல்லுாரிகள் இயங்க வேண்டும். இந்த அங்கீகாரத்துக்கு, கல்லுாரிகள் தரப்பில் உள்கட்டமைப்பு வசதி, ஆய்வக வசதி, பேராசிரியர்களின் கல்வித் தகுதி ஆகியவற்றை சரியாக கடைப்பிடிக்க வேண்டும்.

இந்நிலையில், இன்ஜினியரிங் கல்லுாரிகளில், அண்ணா பல்கலையின் பேராசிரியர்கள் குழு நடத்திய நேரடி ஆய்வில், 100க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், உள்கட்டமைப்பு வசதிகளில், பல்வேறு குளறுபடிகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இந்த கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலையில் இருந்து, 'நோட்டீஸ்' அனுப்பி, விளக்கம் கேட்கப்பட்டது.

இந்நிலையில், உள்கட்டமைப்பு வசதி குறைவு மற்றும் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்த கல்லுாரிகளின் இணைப்பு அந்தஸ்தை ரத்து செய்ய, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. இது குறித்து, சில கல்லுாரிகள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த வழக்கின் முடிவை பொறுத்து, இணைப்பு அந்தஸ்தை ரத்து செய்வதா அல்லது கல்லுாரிகளை மூட, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு பரிந்துரை அனுப்புவதா என்பதை, அண்ணா பல்கலை முடிவு செய்யும் என, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வரும் ஆண்டுகளில், சென்னை ஐ.ஐ.டி., - திருச்சி என்.ஐ.டி., மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி., நிறுவனங்களின் பேராசிரியர்கள் அடங்கிய குழுவை அனுப்பி, அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில் ஆய்வு நடத்தவும் பல்கலை திட்டமிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
17-ஜன-202014:57:06 IST Report Abuse
Indhuindian Great News. This should continue and in the next five years all but about 50 engineering colleges that churn out unemployable engineers with no skills but only a paper certificate should find their exit. These colleges should be converted into schools of excellence and provide quality elementary and secondary education with all facilities including food and accommodation for economically backward students irrespective of e or community. But beware, our friends in the opposition led by Stalin and assisted by Vaiko, Thiruma,Velmurgan Gandhi and ever willing communists would hit the roads since most of these useless institutions are run by their families or associates. Such closure would relieve hundreds of parents of their financial burden since they borrow heavily in the hope of making their wards engineers only to end up with engineers unfit for employment and getting depressed by their ambition thrown to dust.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
15-ஜன-202019:19:59 IST Report Abuse
Bhaskaran கல்யாணமண்டபமாக மாற்றிப்போடுவாங்க
Rate this:
Share this comment
Cancel
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
15-ஜன-202009:35:40 IST Report Abuse
Muthukrishnan,Ram இந்திய அரசுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் அய்யா தமிழ் நாட்டில் காசு கொடுத்து வாங்க வேண்டியது , இனாமாக கிடைக்கிறது. இனாமாக கிடைக்க வேண்டியது காசு கொடுத்து பெறவேண்டி உள்ளது. இந்த நிலை மாறுமா? ???????????????????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X