பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

Added : ஜன 12, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் வென்ற நாகலுார் அரசு மேல்நிலைப்பள்ளி் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சிவபிரேமா வரவேற்றார்.விழுப்புரம் மாவட்ட அளவில் கடந்த 10ம் தேதி நடந்த கோ-கோ, ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் பள்ளி சார்பில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் காமராஜ், நடராஜ் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X