பொது செய்தி

தமிழ்நாடு

சீர்ப்பனந்தல் வருவாய் கிராமத்தை இரண்டாக பிரிக்க மக்கள் கோரிக்கை

Added : ஜன 12, 2020
Share
Advertisement

ரிஷிவந்தியம்: சீர்ப்பனந்தல் வருவாய் கிராமத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கள்ளக்குறிச்சி அடுத்த சங்கராபுரம் வட்டம், அரியலுார் குறுவட்டத்திற்குட்பட்ட சீர்ப்பனந்தல் கிராமத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளது. இந்த வி.ஏ.ஓ., அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் சீர்ப்பனந்தல், இளையனார்குப்பம், கரையாம்பாளையம் ஆகிய மூன்று ஊராட்சிகள் உள்ளன.இதில் சீர்ப்பனந்தலில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும், கரையாம்பாளையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், இளையனார்குப்பத்தில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களும் வசிக்கின்றனர்.இங்குள்ள விவசாயிகள் சிட்டா அடங்கல், சிறு, குறு விவசாய சான்று, பட்டாமாற்றம் உள்ளிட்ட வருவாய்துறை சார்ந்த அனைத்து பணிகளுக்கும் சீர்ப்பனந்தல் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.இளையனார்குப்பம் மற்றும் கரையாம்பாளையத்தில் இருந்து சீர்ப்பனந்தல் செல்ல போதுமான போக்குவரத்து வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.மேலும் மூன்று ஊராட்சிகளும் மிக பெரிய அளவிலான பரப்பளவை கொண்டுள்ளதால் வருவாய் துறையினருக்கும் அதிகளவு பணிச்சுமை ஏற்படுகிறது.எனவே சீர்ப்பனந்தலில் வருவாய் கிராமத்தில் இருந்து கரையாம்பாளையம், இளையனார்குப்பம் ஆகிய ஊராட்சிகளை பிரித்து தனி வருவாய் கிராமம் அமைத்து புதிய வி.ஏ.ஓ., நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X