பராமரிப்பில்லாத ரயில்வே குடியிருப்புகள்வாடகை கட்டடத்தில் தங்கும் ஊழியர்கள்

Added : ஜன 12, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி: புக்கிரவாரியில் ரயில்வே குடியிருப்புகள் முறையான பராமரிப்பின்றி கழிவறையாக மாறி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி கிராமத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ரயில்வே குடியிருப்புகள் உள்ளன. ஸ்டேஷன் மாஸ்டர், ரயில்வே கேட் பணியாளர் உட்பட இங்கு பணிபுரியும் ஊழியர்களின் வசதிக்கேற்ப கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.முறையான பராமரிப்பில்லாததால் கட்டடத்தை சுற்றி செடி, கொடிகள் வளர தொடங்கின. இதனை ரயில்வே அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் தற்போது கழிவறையாக மாறி உள்ளது.ரயில்வே கட்டடத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் முழுவதும் புதர்மண்டி காணப்படுவதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கட்டடத்தில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் அதிகளவு உள்ளன.குடியிருப்பு கட்டடத்தின் அருகே அரசு துவக்கபள்ளி இருப்பதால் விஷ ஜந்துகள் பள்ளியினுள் வர வாய்ப்புள்ளது. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர்.பராமரிப்பில்லாத குடியிருப்புகளால் ரயில்வே ஊழியர்கள் கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதியில் வாடகை கட்டடத்தில் தங்கியுள்ளனர்.புக்கிரவாரியில் உள்ள ரயில்வே குடியிருப்புகளில் வளர்ந்து செடிகொடிகளை அகற்றி, பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X