இந்தியா

'செல்பி வித் குல்பி' 'ஜில்'லுனு ஒரு பரிசு

Added : ஜன 12, 2020
Advertisement

எக்ஸ்போவில், 'B'அரங்கில் இடம்பெற்றுள்ள 'ருசி' ஸ்டாலில், நேற்று முன்தினம் முதல், 'செல்பி வித் குல்பி' என்ற வித்தியாசமான போட்டி நடத்தி, பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் நாளான நேற்றும், இளைஞர்கள் மொபைல்போன்களுடன் குவிந்துவிட்டனர். உற்சாகமாக 'செல்பி வித் குல்பி' போட்டியில் பங்கேற்றனர். ருசி குல்பியுடன் செல்பி எடுத்து, குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு 'வாட்ஸ்- ஆப்'பில் தட்டிவிட்டனர்.'வாட்ஸ் ஆப்பில் முதலில் வந்த 100 கலக்கலான 'செல்பி வித் குல்பி' போட்டோக்களுக்கு, ருசி நிறுவனத்தின் சுவையான ஐஸ்கிரீம் பரிசாக வழங்கப்பட்டது. இப்போட்டி, இன்றும் உண்டு.நீங்க செய்ய வேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னுதான். ருசி நிறுவன ஸ்டாலில், குல்பி விளம்பர போர்டுடன் 'செல்பி' எடுத்து, அந்த போர்டில் உள்ள மொபைல் எண்ணிற்கு நொடியில் அனுப்பினால் போதும்.முதல் 100 நபர்களில் இடம்பிடித்து, ருசி நிறுவனத்தின் ஐஸ்கிரீமை பரிசாக வென்று, அதன் தனித்துவமான சுவையை மெய்மறந்து ருசிக்கலாம். மாலை 3.௦௦ மணி முதல் 7.௦௦ மணி வரை இந்த பரிசு மழை நிகழ்ச்சி நடக்கிறது.அத்துடன், ஸ்டாலில் ருசி நெய் வாங்கும் அனைவருக்கும் சிறப்பு சலுகை காத்திருக்கிறது. மிஸ் பண்ணிடாதீங்க குடும்பத்துடன் வாங்க.. பரிசுகளை அள்ளிகிட்டு போங்க.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X