இந்தியா

தினமலர் ஷாப்பிங் திருவிழா இன்றே கடைசி... மிஸ் பண்ணிடாதீங்க...

Added : ஜன 12, 2020
Advertisement

புதுச்சேரி: புதுச்சேரியில், குளு குளு அரங்கத்தில் ஷாப்பிங், காணக்கிடைக்காத புதுமை பொருட்கள் அணிவகுப்பு, குழந்தைகளை குஷிப்படுத்திட ஏராளமான விளையாட்டுகள், ருசியான உணவுகள், என சர்வதேச ஷாப்பிங் அனுபவத்தை தரும், தினமலர் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' இன்றோடு நிறைவு பெறுகிறது.

புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட மக்கள் பேராதரவுடன், "தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' எனும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, புதுச்சேரி ஏ.எப்.டி., மைதானத்தில், கடந்த 9ம் தேதி துவங்கியது. அசத்தலான ஷாப்பிங், குழந்தைகளுடன் குதுாகலம் என, கடந்த நான்கு நாட்களாக கண்காட்சி அமர்க்களப்பட்டு வருகிறது,. குடும்பம் குடும்பமாக மக்கள் குவிந்து, விரும்பிய பொருட்களை அள்ளிச் செல்கின்றனர்.சர்வதேச ஷாப்பிங் அனுபவம்...புதுச்சேரியில் "ஏசி' வசதி செய்யப்பட்ட அரங்குகளில் நடக்கும் இந்த கண்காட்சியில் வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடை ரகங்கள், மங்கையரை மயக்கும் அழகு சாதனப் பொருட்கள், காலணிகள், பர்னிச்சர்கள், உணவுப் பொருட்கள், ஹெல்த் கேர் பொருட்கள், பைக், கார் என கண்காட்சியில் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன.அனைத்துதரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் தரமான பொருட்கள், சிறப்பு சலுகை விலையில் கிடைப்பதால், விரும்பிய பொருட்களை பொதுமக்கள் நிதானமாக மகிழ்வோடு வாங்கி செல்கின்றனர். 'குளு குளு' அரங்கத்தில் சர்வதேச அளவிலான ஷாப்பிங் அனுபவத்தை தந்ததாக கண்காட்சிக்கு வந்தவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.குட்டீஸ் கார்னர்பெற்றோருடன் வரும் குழந்தைகளுக்கான நவீன மாடலில் கலர்புல் ஆடைகள், விளையாட்டு பொம்மைகள், காலணிகள், பப்பிள் ஷூட்டர், சாக்லேட் வகைகள் என, குவிக்கப்பட்டிருந்ததால், குழந்தைகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.ஷாப்பிங் அரங்கை கடந்ததும் அவர்களுக்கு ஒட்டகச் சவாரி, பைக் ரைடு, குட்டி ரயிலில் உல்லாச பயணம், வாட்டர் போட், ஜம்பிங் பலுான் என, விளையாட்டு அம்சங்கள் அதிகம் இடம் பெற்றுள்ளதால் குழந்தைகள் அளவில்லா மகழ்ச்சியுடன் விளையாடினர்.மகளிர் ஸ்பெஷல் ஏராளம்கண்காட்சி முழுவதும் மகளிருக்கு தேவையான அத்தனை அழகு சாதன பொருட்களும் கிடைக்கின்றன. விதவிதமான அணிகலன்கள், சுடிதார் உள்ளிட்ட நவீன ஆடை ரகங்கள், மகளிருக்கென வடிவமைக்கப்பட்ட டிசைன் காலணிகள், சமைலறையில் காய்கறி நறுக்குவதில் இருந்து அதை பரிமாற தேவையான பாத்திரங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் அத்தனையும் மலையென குவிக்கப்பட்டுள்ளதால் பெண்கள் ஆர்வமுடன் ஷாப்பிங் செய்து மகிழ்ந்தனர்.ஆண்களுக்கும் பஞ்சமில்லைகாட்டன் வேட்டி, சட்டைகள், உள்ளாடைகள், விதவிதமான லெதர் பெல்ட்கள், பர்சுகள், பேக்குகள் தரமாக கிடைக்கின்றன. நவீன மாடல் பைக்குகள், கார்கள் உடற்பயிற்சி சாதனங்கள், கண் கண்ணாடி, வாட்சுகள், வாசனை திரவியங்கள் என, ஏராளனமான பொருட்கள் இடம் பெறறுள்ளதால் அவர்களும் மன நிறைவடைந்தனர்.காலையிலேயே வாங்க!தினமலர் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ'விற்கு வருகை தரும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இக் கண்காட்சியை பார்வையிட ஏராளமானோர் குடும்பத்துடன் வருவர். நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்க, காலையிலேயே கண்காட்சிக்கு புறப்பட்டு விடுங்கள்.காலை 10 :00 மணிக்கே ஏ.எப்.டி., மைதானத்திற்கு வந்துவிட்டால், ஒவ்வொரு ஸ்டாலுக்கும் சென்று பொருட்களை நிதானமாக பார்த்து தேர்வு செய்து வாங்கலாம். பொழுதுபோக்கு அம்சங்களை பொறுமையாக பார்த்து ரசிக்கலாம். இங்குள்ள உணவகங்களில் முந்தியடிக்காமல் நிதானமாக சாப்பிட்டு மகிழலாம்.'வாய்ப்பை தவறவிடாதீர்,ஓராண்டு காத்திருக்கனும்'...கண்காட்சியில் இதுவரையில், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியுடன் சென்றுள்ளனர். குட்டீஸ்களும் ஏராளமான பொழுது போக்கு விளையாட்டுகளில் விளையாடி மகிழ்ந்தனர். உணவு அரங்கில் நுழைந்து வேணு பிரியாணி முதல் பரோட்ட வகைகள், ஐஸ் கிரீம் வகைகள் என அத்தனை உணவு வகைகளும் ஒரு கை பார்த்தனர். இப்படியாக மக்களின் உள்ளத்தை கவர்ந்த தினமலர் கண்காட்சி, இன்றுடன் (13 ம் தேதி) நிறைவு பெறுகிறது.நிறைவு நாளான இன்றும் ஏராளமான பொருட்கள் மீது சலுகை, தள்ளுபடி, பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இறுதி வாய்ப்பை 'மிஸ்' பண்ணாமல், காலையில கண்காட்சிக்கு வந்து, மனதுக்கு பிடித்த பொருட்களை வாங்கலாம். இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள். ஓராண்டு காத்திருக்க வேண்டியிருக்கும்.ஷாப்பிங் நேரம்கண்காட்சிக்கான நுழைவு கட்டணம் ரூ. 40. காலை10:00 மணி முதல் இரவு 8:00 வரையில் ஷாப்பிங் செய்யலாம். வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த இட வசதி, குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கண்காட்சிக்கு வரும் பொதுமக்களுக்கு உதவ, லட்சுமிநாராயணா மருத்துவக் கல்லுாரி மருத்துவக் குழுவும் தயார் நிலையில் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X