இந்தியா

சுட்டீஸ்களை குதுாகலப்படுத்தும் 'கிட்ஸ் ஸோன்'

Added : ஜன 12, 2020
Advertisement

'தினமலர்' கண்காட்சியில் பட்டாம்பூச்சிகள் படையெடுப்பு நடப்பதைப் போல, பல வண்ண ஆடைகளில் வலம் வரும் குழந்தைகளால் புதிய அரிதாரம் பூசிக் கொள்கிறது, அவர்களுக்கான விளையாட்டு களமான 'கிட்ஸ் ஸோன்'.எக்ஸ்போவுக்கு வரும் சுட்டீஸ்களை மகிழ்விக்க, வித விதமான விளையாட்டுகள் அணிவகுத்துள்ளன.

இங்கு ஆசை தீர விளையாடி மகிழும் தங்கள் வீட்டு குட்டி செல்லங்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரிப்பதை பார்த்து, பெற்றோரும் மகிழ்ச்சியில் பூரிக்கின்றனர். அந்த அழகான காட்சியை தங்கள் மொபைல் போனில் போட்டோ, வீடியோ எடுத்து பொக்கிஷமாக பத்திரப்படுத்திக் கொள்கின்றனர்.'டிராம்போளின்' கூண்டுக்குள் குதித்து மகிழ்ந்த சிறுவன் ஜெயபிரகாஷ், 'இந்த மாதிரி கேம் நான் விளையாடினதே இல்ல.. செம ஜாலியா, இன்னும் கொஞ்சம் நேரம் விளையாடனும் போல இருக்கு' என, கூறிக் கொண்டே, மீண்டும் விளையாட்டை நோக்கி திரும்பினார்.காற்றடைத்த மெகா பலுான் போல இருக்கும் 'பன் சிட்டி'யில் விளையாட குட்டீஸ்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதில் சரசரவென சறுக்கியபடி வந்த சிறுமி அப்ரின், 'இதில் விளையாடுறது இதுதான் 'பர்ஸ்ட் டைம். நல்ல ஹைட்டா இருக்கு. செம குஷியா இருக்கு' என்றார்.வாண்டூஸ்களின் சொர்க்கபுரியான குட்டி ரயிலில் பயணிக்க நீண்ட வரிசை. ரயிலில் ஏறி சுற்றிவந்த வர்ஷினி, 'இன்னும் கொஞ்சம் நேரம் விளையாடனும் போல இருக்கு மம்மி' என, குதுாகலமாக ஆர்ப்பரித்தாள்.'வாட்டர் போட்' எனப்படும் குட்டீஸ்களின் படகு சவாரி பகுதியில், ஒரே ஆரவாரம், குதுாகலம். போட்டில் இருந்தபடி தான் பேசுவேன் என அடம்பிடித்த தியா கூறுகையில், 'பயங்கர ஹேப்பியா இருக்கு. நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. ஜாலியோ ஜாலி' என தன் தந்தையை நோக்கி உற்சாக குரல் கொடுக்க, உடன் சவாரி செய்த சுட்டீஸ்களும் ஆர்ப்பரித்தனர்.உங்கள் வீட்டு குழந்தையும் இதுபோல் குதுாகலிக்க வேண்டாமா... அதைப் பார்த்து நீங்கள் மகிழ வேண்டாமா... குழந்தைக்கு இன்னிக்கு லீவுதானே. குட்டீஸ்களை கூப்பிட்டுகிட்டு ஏ.எப்.டி மைதானத்திற்கு வந்துடுங்க...உங்க மழலைகளின் முகத்தில், மனசுக்குள் மத்தாப்பாய் பூக்கும் மகிழ்ச்சியை அப்படியே உங்களது மொபைல்போனில் 'கிளிக்' பண்ணிக்குங்க.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X