பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் தொழில் முனைவோர் வியட்நாமில் ஒரு வாரம் முகாம்

Added : ஜன 12, 2020
Advertisement

திருப்பூர் : திருப்பூரைச் சேர்ந்த இளம் தொழில் முனைவோர், ஆடை உற்பத்தி நுட்பங்களை அறிய, வியட்நாம் சென்றுள்ளனர்.

திருப்பூரில் உள்ள, ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் படிக்கும் இளம் தொழில் முனைவோர், 15 பேர் மற்றும் பேராசிரியர் இருவர், வியட்நாம் சென்றுள்ளனர். 9ம் தேதி புறப்பட்டுச் சென்ற இக்குழுவினர், 15ம் தேதி வரை, அங்கு இருப்பர்.அந்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களை பார்வையிட்டு வரும் இவர்கள், தொழில் அமைப்பினருடனும் கலந்துரையாடுகின்றனர்.

இது குறித்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலான, ஏ.இ.பி.சி., தலைவர் சக்தி வேலிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:வங்கதேசம், வியட்நாம், கம்போடியா என, வர்த்தகப் போட்டி நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டன. மிஷின் மற்றும் தொழிலாளர் திறனில், 90 சதவீதத்தை, அந்நாட்டு நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. ஆனால், நம் ஆடை தயாரிப்பு துறையில், இது, 60 சதவீத அளவிலேயே உள்ளது; இதை, 90 சதவீதமாக உயர்த்துவது காலத்தின் கட்டாயம்.

உற்பத்தி நுணுக்கங்களை அறிந்து பயன்படுத்துவதற்காகவே, இளம் தொழில் முனைவோர், 15 பேர், வியட்நாம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், திருப்பூர் திரும்பியபின், ஆயத்த ஆடை துறையை மேம்படுத்த, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X