சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை, தற்கொலை, பலி

Added : ஜன 12, 2020
Advertisement

கார் மோதிஎஸ்.ஐ., பலி-சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்தவர் நாகராஜ், 51. நெற்குப்பையில், எஸ்.ஐ., ஆக பணிபுரிந்தார். நேற்று மதியம், மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அய்யாபட்டி நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது, கார் மோதி இறந்தார்.கொட்டாம்பட்டி போலீசார், புதுச்சேரி டிரைவர் தமிழ்மணி, 48, என்பவரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.கர்நாடக சகோதரர்கள்கடலில் மூழ்கி பலி

புதுச்சேரி: கர்நாடகா மாநிலம், பெங்களூரை அடுத்த பையபைத்தாநல்லி கிராமத்தைச் சேர்ந்த விஜயன் மகன்கள் கவுதம், 22; விவேக், 20; தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்த, 38 பேருடன், நேற்று முன்தினம், மேல்மருவத்துார் கோவிலுக்கு இருமுடி கட்டி, வந்தனர்.அங்கு தரிசனத்தை முடித்து, நேற்று காலை புதுச்சேரி வந்தனர். காலாப்பட்டு அருகில் உள்ள தமிழக பகுதியான பொம்மையார் பாளையம் கடற்கரையில், மதியம், 2:30 மணிக்கு அனைவரும் குளித்தனர்.அப்போது, கடலில் எழுந்த ராட்சத அலையில், விவேக் சிக்கி கொண்டார்.

அவரது அண்ணன் கவுதம், விவேக்கை காப்பாற்ற முயன்றார். ஆனால், அவரும் ராட்சத அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார்.உள்ளூர் மீனவர்கள், கடலில் குதித்து, இருவரையும் மீட்டு, கரைக்கு இழுத்து வந்தனர். இருவரும் மயங்கிய நிலையில் இருந்ததால், கனக செட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X