சம்பவம் செய்தி

தமிழ்நாடு

56 ஆயிரம் கிலோ பாலிதீன் பொருட்கள் பறிமுதல்

Added : ஜன 12, 2020
Share
Advertisement

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும், 'பிளாஸ்டிக்' பொருட்களுக்கு, 2019 ஜனவரி, 1 முதல் தடை விதித்து, தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன்படி, பாலிதீன் பைகள், குவளைகள், தண்ணீர் பாக்கெட், ஸ்டிரா உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.கடந்த ஆண்டு மட்டும், உணவு பாதுகாப்பு துறையால், 2 லட்சத்து, 59 ஆயிரத்து, 575 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, 56 ஆயிரத்து, 338 கிலோ பாலிதீன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு, 51 லட்சத்து, 19 ஆயிரத்து, 831 ரூபாய்.அதிகபட்சமாக, துாத்துக்குடி மாவட்டத்தில், 15 ஆயிரத்து, 154 கிலோ, சென்னையில், 12 ஆயிரத்து, 603 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில், அதிகபட்சமாக, 26 ஆயிரத்து, 271 கடைகளில் ஆய்வு நடந்தது. இவற்றை பயன்படுத்திய, 1,027 பேருக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X