பொது செய்தி

தமிழ்நாடு

மயிலத்தில் தீயணைப்பு நிலையம்அமைக்க நடவடிக்கை தேவை

Added : ஜன 12, 2020
Advertisement

மயிலம்: மயிலத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மயிலம் சட்ட மன்ற தொகுதியிலுள்ள ரெட்டணை, பெரியதச்சூர், வீடூர், பாதிராபுலியூர், கூட்டேரிப்பட்டு, செண்டூர் உட்பட 47 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.மேலும் வானுார் தாலுகாவில் கரசானுார், பெரும்பாக்கம், பரிக்கல்பட்டு, குன்னம், எறையூர், பொம்பூர், மரக்காணம் ஒன்றியத்தை சேர்ந்த கீழ்எடையாளம், கருணாவூர், அன்னம்புத்துார் உட்பட பல கிராமங்கள் உள்ளன.இந்த கிராமங்களில் பெரும்பாலன வீடுகள் கூரைகளால் அமைந்துள்ளது. வெயில் காலத்தில் இந்த கிராமங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் கூரை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தால், அதனை அணைக்க மயிலத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து தான் வாகனங்கள் வரவேண்டிய நிலை உள்ளது.மயிலம் பகுதியில் பெரும்பாலான கிராமங்கள் திண்டிவனத்திலிருந்து வெகு துாரத்தில் உள்ளதால், தீ விபத்து ஏற்படும்போது, தீயணைப்பு வாகனங்கள் வந்து சேர்வதற்குள் வீடுகள் முற்றிலும் எரிந்து, பெரிய அளவிலான இழப்பை ஏற்படுத்துகிறது.மேலும் இப்பகுதிகளில் பெரும் விபத்துக்கள் நிகழ்ந்தாலும், காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனை கொண்டு செல்ல இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.தொகுதியின் தலைமையிடமான மயிலத்தில் தீயணைப்பு நிலையம் அமைத்தால் இப்பகுதி கிராம மக்கள் பயனடைவர். எனவே, மயிலத்தில் தீயணைப்பு நிலையம் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X