பொது செய்தி

தமிழ்நாடு

உளுந்துார்பேட்டையில் 350 கி.மீ., புறா, 'ரேஸ்'

Added : ஜன 12, 2020
Advertisement
 உளுந்துார்பேட்டையில் 350 கி.மீ., புறா, 'ரேஸ்'

உளுந்தூர்பேட்டை : உளுந்துார்பேட்டையில், 350 கி.மீ., தொலைவை இலக்காக கொண்டு, புறா, 'ரேஸ்' நடத்தப்பட்டது.
திருச்சி ராக் சிட்டி சார்பில், 'ஓபன் புறா ரேஸ்' நேற்று நடத்தப்பட்டது. இதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, புறாக்கள் கலந்து கொள்ள, அதன் உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது; 800 புறாக்கள் பங்கேற்றன.இந்தப் புறாக்கள், 350 கி.மீ., தொலைவில் இருந்து பறக்க விடப்பட்டு, அதன் உரிமையாளர் வீட்டிற்கு சென்று அடையும் வகையில், போட்டிகள் நடத்தப்பட்டன.உளுந்துார்பேட்டை, விழுப்புரம், மதுராந்தகம், செங்கல்பட்டு, திருச்சி, ஆனந்தப்பட்டி, ஆந்திரா வின் நாயுடுபேட்டை ஆகிய ஏழு பகுதிகளில் இருந்து, நேற்று காலை, 7:45 மணியளவில், ஒரே நேரத்தில் புறாக்கள் பறக்க விடப்பட்டன.

இந்த புறாக்கள், உரிமையாளர் வீட்டிற்கு சென்றடைந்த உடன், அதன் கால்களில் கட்டப்பட்டு உள்ள, 'டேக்'கை கழற்றி, மொபைல் போன் மூலம், திருச்சி ராக் சிட்டி கிளப்புக்கு தகவல் தெரிவிப்பர்.யார் முதலில் தகவல் அனுப்புகின்றனரோ, அவர்களுக்கு முதல் பரிசாக, 15 ஆயிரம் ரூபாய், இரண்டாவது பரிசாக, 10 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக, 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே இருந்து, 106 புறாக்களை, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த அகமது சலீம், துாத்துக்குடி திருமணி, புதுக்கோட்டை விஜய் ஆகியோர் பறக்க விட்டனர்.

அவர்கள் கூறுகையில், 'தமிழக அளவில், ஓபன் புறா ரேஸ் நேற்று நடந் தது. பிப்ரவரி, 2ம் தேதி, 750 கி.மீ., தொலைவில் இருந்து, புறாக்கள் பறக்க விடும் ரேஸ் நடத்தப்படும். அதன்பின், 1,300 கி.மீ., தொலைவில் இருந்து புறாக்கள் பறக்க விடும் போட்டி நடத்தப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X