அமைச்சரின் உதவியாளர் கார் விபத்தில் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமைச்சரின் உதவியாளர் கார் விபத்தில் பலி

Added : ஜன 12, 2020

புதுக்கோட்டை : சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளரும், கார் டிரைவரும் விபத்தில் சிக்கி பலியாகினர்.

புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 31. எட்டு ஆண்டுகளாக, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்த இவர், அ.தி.மு.க.,வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு, மாவட்ட தலைவராகவும் இருந்தார். புதுக்கோட்டையில், நேற்று முன்தினம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர், ஒன்றிய தலைவர்களுக்கான தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்ற, அ.தி.மு.க.,வினருக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர், நேரில் வாழ்த்து தெரிவித்தார்.நேற்று முன்தினம் இரவு, அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை சென்றார்.

அமைச்சரை, திருச்சி விமான நிலையத்தில் வழியனுப்பி விட்டு, பொலீரோ ஜீப்பில், வெங்கடேசன், சொந்த ஊரான பரம்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு, வீரப்பெருமாள்பட்டி அருகே சென்ற கார், எதிர்பாராத விதமாக சாலையோர புளியமரத்தில் மோதியது. விபத்தில், வெங்கடேசன், கார் டிரைவர் செல்வம், 38, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரின் குடும்பத்தினருக்கும், முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும், ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X