சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சி நகை கடையில் திருடிய பெண் கைது

Added : ஜன 12, 2020
Advertisement

திருச்சி : திருச்சி நகைக் கடையில், பெண்ணிடம், நகை, பணத்தை திருடிச் சென்ற பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையைச் சேர்ந்த பெண் சிவபாக்கியம், 50. இவர், 9ம் தேதி, திருச்சியில் உள்ள பிரபல நகைக் கடைக்கு, உறவினர்களுடன் வந்தார். தன் கைப்பையை மேஜையில் வைத்து, புதிய நகைகளை தேர்வு செய்து கொண்டிருந்தார்.புதிய நகைகளை தேர்வு செய்த சிவபாக்கியம், பழைய நகை மற்றும் பணம் வைத்திருந்த கைப்பையை தேடியபோது, அது மாயமாகி இருந்தது. அவரது புகார்படி, கோட்டை போலீசார், கடையில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.இதில், சிவபாக்கியத்தின் பின்னால் நின்ற ஒரு பெண், நகை, பணம் வைத்திருந்த பையை திருடிச் சென்றது தெரிந்தது.

தொடர் விசாரணையில், நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே கூறைநாடு பகுதியைச் சேர்ந்த குமார் மனைவி ஆனந்தவல்லி, 47, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 7 சவரன் நகை மற்றும் பணத்தை போலீசார் மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X