சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பலாத்காரம் ஒடிசாவில் வாலிபர் கைது

Added : ஜன 12, 2020
Advertisement

திருப்பூர் : சிறுமியை, பலாத்காரம் செய்து, தப்பிய ஒடிசா வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

பீஹாரைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு திருமணமாகி, திருப்பூரில், கணவருடன், வசிக்கிறார். அவருக்கு, குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்ப்பதற்காக, 13 வயது தங்கை, திருப்பூர் வந்தார். கடந்த ஆண்டு, மார்ச், 29ல், சிறுமியின் உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டது. திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது, சிறுமி, ஆறு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிந்தது.

திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இதில், சிறுமியின் அக்கா வீட்டருகே வசித்து வந்த, ஒடிசாவைச் சேர்ந்த அஜித் கர்ஷல், 20, என்பவர், சிறுமியை பலாத்காரம் செய்தது தெரிந்தது. சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு, குறை பிரசவத்தில் குழந்தை பிறந்து, இறந்தது.எஸ்.ஐ., முத்துகுமார் தலைமையில் தனிப்படையினர், ஒடிசா சென்று, பல்லாங்கி மாவட்டத்தில் பதுங்கியிருந்த அஜித் கர்ஷலை, கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X