பொது செய்தி

தமிழ்நாடு

மீன்வள உதவியாளர் பணி விண்ணப்பம் வரவேற்பு

Added : ஜன 12, 2020
Advertisement

விழுப்புரம்; மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு;விழுப்புரம் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் காலியாக உள்ள ஒரு மீன்வள உதவியாளர் பணியிடம் இன சுழற்சி முறையில் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பத்தாரர்கள் எட்டாம் வகுப்புதேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். நீச்சல், மீன்பிடி தொழில் தெரிந்தவரும்.புதிய வலை பின்னுதல் மற்றும் பழுதுபட்ட வலையினை பழுது நீக்கம், பரிசல் இயக்க தெரிந்திருக்க வேண்டும். மீன்வளத்துறை மூலமாக நடத்தப்பட்ட பயிற்சிகள் தொடர்பான சான்றிதழ் பெற்றுள்ளவருக்குமுன்னுரிமை வழங்கப்படும்.நீச்சல்குளம் அல்லது தகுதியான நீர்நிலைகளில் முதல் நிலை நீச்சல்திறன் தொடர்பான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.7.2019 அன்று ஆதிதிராவிடருக்கு வயது உச்சவரம்பு 35-க்கு மிகாமல் இருக்கவேண்டும்.ஆதிதிராவிடர் (முன்னுரிமைபெற்றவர்), ஊதிய ஏற்றமுறை லெவல் 2 செல் 1 ரூ. 15,900-50400 என்ற ஊதிய விகிதத்தில் ஊதியம் ரூ.15,900 வழங்கப்படும்.விண்ணப்பதாரர்களின் தகுதிகளை பரிசோதனை செய்து நேர்காணல் நடத்தி தேர்வு செய்யப்படும்.விண்ணப்பதாரர்கள் கல்வி சான்றிதழ், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வயது நிருபண சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து மீன்துறை உதவி இயக்குநர், நித்தியானந்தம் நகர், வழுதரெட்டி, விழுப்புரம் 605 401 என்ற முகவரிக்கு, வரும் பிப்., 12ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு கலெக்டர் செய்திக்குறிப்பு கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X