அரசியல் செய்தி

தமிழ்நாடு

இளைஞர்கள், 'போர் பரணி' பாட ஆயத்தமாக வேண்டும்: ஸ்டாலின்

Added : ஜன 12, 2020 | கருத்துகள் (5)
Advertisement

சென்னை : 'தமிழக சட்டசபையில், நுாற்றாண்டு விழா நிறைவடையும் போது, இளைஞர்கள் போர் பரணி பாட ஆயத்தமாக வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:கடந்த, 1921 ஜனவரி, 12ல், கன்னாட்கோமகனால், தமிழக சட்டசபை துவக்கி வைக்கப்பட்டது. தற்போது, தமிழக சட்டசபையின் நுாற்றாண்டு விழா துவங்கி உள்ளது. இந்த நுாற்றாண்டு விழா நிறைவடையும் போது, மக்களாட்சி மாண்புகளை காத்திடும் வகையில், மேலும் ஒரு புதிய அத்தியாயம் உருவாவதற்கான களம், இப்போதே அமைந்து விட்டது என்ற, நம்பிக்கை பிறந்திருக்கிறது.

திராவிட இயக்க ஆணிவேருக்கு மேலும் உரம் சேர்க்கவும், சுயமரியாதை காக்கவும், தமிழினம் மற்றும் தமிழ்மொழியின் பெருமைகளை போற்றி பாதுகாக்கவும், இளைஞர்கள் இன்முகத்துடனும், நம்பிக்கையுடனும், ஜனநாயக போர் பரணி பாட ஆயத்தமாக வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.'டுவிட்டர்' பக்கத்தில், ஸ்டாலின் கூறியிருப்பதாவது:இலங்கை தமிழர்களுக்கு, குடியுரிமை வழங்க மறுக்கும் சட்டத்திற்கு ஆதரவாக ஓட்டளித்து விட்டு, அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வாங்கித் தரப்போவதாக, அ.தி.மு.க., அரசு நாடகம் ஆடி வருகிறது.

இந்த நாடகத்தை, சென்னை பல்கலையின், குற்றவியல் துறையின் மூத்த ஆய்வாளர், பேராசிரியர் இளம்பரிதி அம்பலப்படுத்தி உள்ளார். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தருவோம் என்ற, அ.தி.மு.க., அரசின் பொய் வாக்குறுதிக்கு, மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்ட ஊடகங்கள், இந்த பேராசிரியரின் உண்மை அறிக்கையை முழுமையாக வெளியிட முன் வருமா?இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
13-ஜன-202022:21:28 IST Report Abuse
RajanRajan கலிங்கத்து பரணி ன்னு எழுதுறதுக்கு பதில் போர் பரணின்னு துண்டு சீட்டு எழுதி எவனோ சுடலைகிட்ட கொடுத்துட்டானோ.
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
13-ஜன-202017:05:41 IST Report Abuse
Baskar ஆமாம் இது மார்கழி மாதம் இப்போது பாடினாலாவது எதோ கோவில் கொஞ்சம் வெண்பொங்கல் கொடுப்பார்கள். தளபதி சொன்னது போல் தொண்டர்களே போர் பரணி பாடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Mano - Dammam,சவுதி அரேபியா
13-ஜன-202015:30:30 IST Report Abuse
Mano இலங்கை தமிழர்களின் படுகொலைக்கு காரணமானவர்களே இப்போது அவர்களின் குடியுரிமை பற்றி பேசுவது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதைதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X