அரசியல் செய்தி

தமிழ்நாடு

சோனியாவுடன் இன்று கே.எஸ்.அழகிரி சந்திப்பு

Added : ஜன 12, 2020 | கருத்துகள் (1)
Advertisement

'உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை, தி.மு.க., ஒதுக்கவில்லை' என, காங்கிரசார் புகார் கூறி வரும் நிலையில், டில்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை, தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி, இன்று சந்தித்து பேச உள்ளார்.


அதிருப்தி


நடந்து முடிந்த ஊரக, உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் போட்டியிட்டது. குறைந்த சதவீத இடங்களில் போட்டியிட்டு, பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.அதேநேரத்தில், மாவட்ட, ஒன்றிய தலைவர்களுக்கான மறைமுக தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு போதிய இடங்களை, தி.மு.க., ஒதுக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த, தமிழக காங்., தலைவர் அழகிரி, 'தி.மு.க.,வின் இந்த செயல்பாடு, கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது' என, அறிக்கை வெளியிட்டார்.

உடனே, தி.மு.க., தரப்பில், 'அறிக்கை வெளியிடுவது தேவையற்ற செயல்' என, பதிலடி கொடுக்கப்பட்டது. இதன்பின், 'தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி நீடிக்கிறது' என, அழகிரி தெரிவித்தார். இந்நிலையில், கே.எஸ்.அழகிரி நேற்று, சென்னையில் இருந்து டில்லி புறப்பட்டு சென்றார். அவருடன், சட்டசபை காங்., தலைவர் கே.ஆர்.ராமசாமியும் சென்றார்.இருவரும், இன்று சோனியாவை சந்தித்து பேசுகின்றனர். அப்போது, உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., ஒதுக்கிய இடங்கள், வெற்றி, தோல்வி குறித்து, அவரிடம் விவரிக்க உள்ளனர். ஆலோசிக்கப்படும்.

அப்போது, தி.மு.க., கூட்டணியில் தொடர்வதா என்பது குறித்தும், ஆலோசிக்கப்படும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும், கோவை, துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில், காலியாக உள்ள மாவட்ட தலைவர்கள் பதவிக்கு, புதிய தலைவர்களை நியமித்தல்.செயல்படாத மாநில நிர்வாகிகள், கோஷ்டி தலைவர்களின் ஆதரவு மாவட்டத் தலைவர்களை மாற்றி, தன் ஆதரவாளர்களை நியமிப்பது குறித்தும், சோனியாவுடன் அழகிரி பேசுவார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
13-ஜன-202015:08:53 IST Report Abuse
s.rajagopalan வரலாறு மிக்க சந்திப்பு அழகிரிக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X