கொண்டங்கி சாலை சேதம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

Added : ஜன 12, 2020
Advertisement

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கொண்டங்கி கிராமத்திற்கு சாலை மோசமான நிலைக்கு மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

விழுப்புரம் அருகே தோகைப்பாடி சாலையில் இருந்து கொண்டங்கி கிராமத்திற்கு செல்லும் சாலையில், வெங்கடேசபுரம் ரயில்வே கேட் வழியாக தினந்தோறும் நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வாகனங்களில் பயணிக்கின்றனர்.இதில் பலர் விவசாயிகள் என்பதால் டிராக்டர், லாரிகளில் பெரும்பாலும் செல்கின்றனர். இதில், வெங்கடேசபுரம் ரயில்வே கேட்டருகே உள்ள சாலை கடந்த பல மாதங்களாக சேதமடைந்து ஆங்காங்கே ஒருபுறம் பெயர்ந்தும், மறுபுறத்தில் மேடு, பள்ளங்களாகவும் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.இந்த சாலையை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த சாலை ரயில்வே நிர்வாகத்தின் கட்டுபாட்டில் வருவதால், அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாத நிலை நீடிக்கிறது.அவ்வழியே பயணித்து செல்லும் மக்கள், விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகத்தார் சாலையை சீரமைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X