பொது செய்தி

தமிழ்நாடு

சி.எஸ்.ஐ., தேவாலயத்தில் சமத்துவ பொங்கல் விழா

Added : ஜன 12, 2020
Advertisement

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஒரத்துார் கிராமத்தில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ., துாய பேதுாரு ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.ஆலய ஊழியர் சாமுவேல் தலைமை தாங்கினார். தேவாலய வளாகத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் வைத்து பிரார்த்தனை செய்தனர்.திருச்சபை பெரியோர்கள், ஞாயிறு பள்ளி குழந்தைகளோடு, சமத்துவ பொங்கல் வைத்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இந்த நிகழ்ச்சியில், திருச்சபை செயலாளர் சேகர், ஊழியர்கள் ஜீவானந்தன், ஜெசிநிர்மலா, எஸ்தர், குணசீலி, விரோனிக்காள், எலிசபெத், வாலிபர் சங்க நிர்வாகிகள் மனாசேராஜ், ஆரிஸ், பிராங்க்ளின், விமல், சதீஷ், அனிதா, கிளாரா மற்றும் ஒரத்துார் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X