பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் ரஜினியுடன் விக்னேஷ்வரன் சந்திப்பு

Added : ஜன 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன், நடிகர் ரஜினியை, அவரது இல்லத்தில், நேற்று சந்தித்துப் பேசினார்.

இலங்கையில், உள்நாட்டு போருக்கு பின் நடந்த தேர்தலில், வடக்கு மாகாண முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சி.விக்னேஷ்வரன். தற்போது, இவரின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. இந்நிலையில், தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விக்னேஷ்வரன், நேற்று, சென்னை போயஸ் கார்டன் வீட்டில், ரஜினியை சந்தித்து பேசினார். அப்போது, இலங்கைக்கு ரஜினி வர வேண்டும் என, அழைப்பு விடுத்தார்.

இலங்கை அரசியல் நிலவரம் குறித்தும், இலங்கை தமிழர்களுக்கான இரட்டை குடியுரிமை பற்றியும், அவர்களின் வாழ்க்கை நிலைமை குறித்தும், ரஜினியிடம் விக்னேஷ்வரன் எடுத்துரைத்ததாக தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJA - madurai,இந்தியா
13-ஜன-202009:56:49 IST Report Abuse
RAJA ஐயா விக்னேஸ்வரன் அவர்களே தமிழ்நாட்டில் தமிழ்ப்பற்று உள்ள தமிழ்த்தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்களை அழைக்காமல் , திரைப்பட நடிகரை அதுவும் வேறு மாநிலத்தவர்,எத்தனை வருடங்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும் வேறு மாநிலத்தவர்களுக்கு அவர்கள் இருக்கும் மாநில மக்களை பற்றிய உணர்வு இருக்கவே இருக்காது. ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X