சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடையில் திருட்டு

Added : ஜன 12, 2020
Advertisement

சின்னசேலம்: பெரியசிறுவத்துார் கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த பெரியசிறுவத்துார் ஏரிக்கரை அருகில் டாஸ்மாக் உள்ளது. நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடைக்கு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு பாதுகாப்பில் இருந்த கணேசன் என்பவரை தாக்கி, அவரை கட்டி வைத்துள்ளனர். பின்னர் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ள சென்று 127 மது பாட்டில்களை திருடி சென்றுள்ளனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., ராமநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டார்.இது குறித்த புகாரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X