பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்துார் பாரதியார் கல்லுாரி பட்டமளிப்பு விழா அமைச்சர் அன்பழகன் பங்கேற்பு

Added : ஜன 12, 2020
Advertisement

ஆத்தூர்: ஆத்தூர் தேவியாக்குறிச்சி பாரதியார் மகளிர் பொறியியல் கல்லூரியில் நடந்த 7 வது பட்டமளிப்பு விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பங்கேற்று பட்டங்கள் வழங்கினார்.கல்லூரி அன்னை தெரசா கலையரங்கில் நடந்த விழாவில், ஆத்தூர் தேவியாக்குறிச்சி பாரதியார் கல்வி நிறுவனங்களின் செயலர் மஞ்சினி ராமசாமி தலைமை தாங்கினார். தலைவர் இளையப்பன், பொருளாளர் செல்வமணி, இணை செயலாளர், துணை தலைவர்கள் இளவரசு, ராஜூ, இயக்குனர் டத்தோ பிரகதீஷ் குமார் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர் புனிதா பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.சிறப்பு விருந்தினர் தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன் பங்கேற்று மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி பேசுகையில், உயர் கல்வியை பெறுவதில் பிற மாநிலங்களை விட தமிழகம் முதலிடம் வகிக்கிறது. உயர் கல்விக்கு இந்த அரசு முக்கியத்துவம் அளிப்பதே இதற்கு காரணம்.தமிழக அரசின் சார்பாக பெண் கல்வியின் மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பட்டம் பெறும் மாணவியர், பெற்ற கல்வி சமுதாய வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும் என்றார்.விழாவில், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் 144 மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதுவரை ஆயிரம் பேர் பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.கெங்கவல்லி மற்றும் ஆத்தூர் எம்.எல்.ஏ., மருதமுத்து, சின்னத்தம்பி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.கல்லூரி துணை முதல்வர் குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X