அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஹிந்து என்றாலே சிலருக்கு அலர்ஜி! ; துணை ஜனாதிபதி வெங்கையா பேச்சு

Added : ஜன 12, 2020
Share
Advertisement

சென்னை : ''நம் நாட்டில் ஹிந்து என்று சொன்னாலே, சிலருக்கு அலர்ஜியாக உள்ளது,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

ஒரு கடவுள் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் சார்பில், விவேகானந்தர் பிறந்த நாள் விழா, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரதகான சபாவில் நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:அனைத்து மதங்களும் மகத்தானவை; பல்வேறு நாடுகளில் பாதிப்பிற்கு உள்ளாகும் சிறுபான்மையினரை, நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அதையும் சிலர் எதிர்க்கிறார்கள். நம் நாட்டில் மதச்சார்பின்மை முன்பே உள்ளது. அதற்கு பின் தான், அரசியல் அமைப்பு சட்டம் உருவானது.

அனைத்து மதங்களும் முக்கியம் என, நாங்கள் நம்புகிறோம். ஹிந்துத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். நம் நாட்டில், ஹிந்து என்று சொன்னாலே, சிலருக்கு அலர்ஜி. அவர்கள் அவ்வாறு நினைக்க உரிமை உண்டு; யாரையும் ஜாதி ரீதியாக, வேறுபடுத்தி பார்க்கக் கூடாது. பிற மதத்தினரையும் மதிக்க வேண்டும்.இதர மதங்களில், ஒரு கடவுள் மட்டுமே உள்ளது. ஹிந்து மதத்தில், ஒரு கடவுளை மட்டும் வழிபடுவது அல்ல. கோடிக்கணக்கான கடவுள்கள் உள்ளன. யோகா பயிற்சிவித்தியாசமான வழிபாட்டு முறைகள் உள்ளன.

அதில், கூடுதலாக ஒரு கடவுளை இணைக்க வேண்டும் என்றாலும் இணைக்கிறோம்.யோகா உடலுக்கு நல்லது; அது, பிரதமர் மோடிக்காக அல்ல. வெளிநாடுகளில், மோடியால் தான் யோகா பிரபலமாகி உள்ளது. எனவே, ஆரோக்கியத்துடன் வாழ, யோகா பயிற்சி செய்யுங்கள். தாய் மொழி கல்வி அத்தியாவசியமானது. உயர்கல்வி வரை, தாய்மொழியில் படிக்க வேண்டும். மத்திய - மாநில அரசு, தாய் மொழி கல்வியை கற்பிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்கள் ஜெயகுமார், பண்டியராஜன் உட்பட, பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X